பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ৰবঙ্গ - செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r י மரணம் அடைந்து அவரது பதவியிடத்தில் முத்துவிஜய ரெகுநாத சேதுபதி ஆட்சிக்கு வந்த பொழுது சீதக்காதி மரைக்காயரது குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் அரசியலை சரியாகப் புரிந்துகொள்ளாமல் கிழவன் சேதுபதியினால் வழங்கப்பட்ட சலுகைகளை அவருக்கு தொடர்ந்து இருப்பதாக எண்ணிக்கொண்டு அடாவடித் தனமாக நடந்து வந்தார். அதில் இரண்டு நிகழ்ச்சிகளை முக்கியமாகக் குறிப்பிடலாம். முதலாவதாக கீழக்கரையில் டச்சுக்காரர்கள் புதிதாக ஏற்படுத்த இருந்த பண்டக சாலையை அடியாள்களுடன் ஒருநாள் சென்று தாக்கி டச்சுக்காரர்களுடைய பொருள்களுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தினர். அப்பொழுது அந்த சச்சரவை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுப்பட்ட சேதுபதி மன்னரது அலுவலர் ஒருவரையும் மோசமாக தாக்கி விட்டனர். o இரண்டாவதாக மறைந்த கிழவன் சேதுபதியின் மகனும் இராமநாதபுரம் சேதுபதி பட்டத்திற்கு தகுதியற்றவராக புறக்கணிக்கப்பட்டவருமான பவானி சங்கரன் என்பவர் அப்பொழுதிருந்த முத்து விஜய ரெகுநாத சேதுபதிக்கு எதிராக மறைமுகமான போர் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இராமநாதபுரம் அரசுக்கு எதிரிகளாக விளங்கிய மதுரை நாயக்கர் மன்னரையும் தஞ்சாவூர் மராட்டிய மன்னரையும் தமது நடவடிக்கைகளுக்கு உதவி பெறுவதற்கும் அவர்களை தொடர்பு கொண்டிருந்தார். இந்த முயற்சியில் குதிரைப்படை அணி ஒன்றினை அமைப்பதற்கு சீதக்காதி மரைக்காயரது குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞனை அனுகினார். அவரும் அவசரப்பட்டு பாவானி சங்கரத் தேவருக்கு பொது உதவி செய்தார். தமது அரசை அகற்றுவதற்கு செய்யப்படும் இந்த சதியில் அந்த இளைஞர் ஈடுபட்டிருந்ததை சேதுபதி மன்னர் அவரை ஒரு இராஜ துரோகியாக முடிவுசெய்து சிறையிட்டு பல வழிகளிலும் துன்புறத்தினார். அவருக்கு விலங்குகள் இடப்பட்டுக் கைவிரல்களின் நகக்கணுக்களை குறடு கொண்டு நசுக்கி சித்ரவதை செய்ததையும் டச்சு ஆவணங்களில் காண முடிகின்றது. اسـ حا