பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் Հg> יר (Föæg அறுதியிட் டு தெளிவாக வரைந்திருப்பது அறியத்தக்கதாகும். மேலும் உமறுப்புலவருக்குப் பிறகு நபி அவதார அமர்மானை என்ற இலக்கியத்தை இயற்றிய கிழக்கரையைச் சேர்ந்த சிந்துக் களஞ்சியப் புலவர் என்பவர் உமறுப் புலவரது மகன் என்பதை அந்த இலக்கியத்தில் குறிப்பிட்டிருப்பது இங்கு ஆராயத்தக்கது ஆகும். மேலும் உமறுப்புலவர் பாடிய சீறாப்புராணத்திற்கு வள்ளல் சீதக்காதி அவர்கள் காரணமாக இருந்தார் என்பதற்கான அகச்சான்று எதுவும் சீறாப்புராணத்தில் இல்லை. மாறாக சீறாப்புராணச் பாடியதற்கு மூலகாரணமாக இருந்த கிழக்கரை வணிகரும் கொடைநாயகருமாகிய அபுல் காசிம மரைக்காயர் அவர்களைப்பற்றிய சிறப்புத்தொடர்கள் சீறாப்புராணத்தில் பல இடங்களில் காணப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகுக் மற்று மீ வள்ளல் சீதக்காதி அவர்களைப் பற்றி தமிழகமெங்கும் பரவலாக சொல்லப்படும் இன்னொரு வழக்கு "செத்தும் கொடுத்தார் சீதக்காதி” என்பதாகும். பொதுவாக மனிதர்கள் இறந்து விட்டபிறகு அவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு வந்ததாக செய்தி இல்லை. அத்துடன் வள்ளல் அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாம் மார்க்கத்தில் இறந்து விட்ட ஒரு முஸ்லிமர் மீண்டும் கியாமத்து நாளில் (ஊழிக்காலத்தில்) தான் இறைவனால் உயிருடன் எழுப்பப்பட்டு அவரவர் செய்கைகளுக்குத் தக்க கூலி வழங்கப்படும் என்பது முடிவான கொள்கையாகும். ஆதலால் இறந்து போன வள்ளல் அவர்கள் உயிருடன் வந்து கொடை கொடுத்தார் என்பது அறிவுபூர்வமாகாது. செய்திப்போக்குவரத்தும், வாகன வசதிகளும் இல்லாத அந்தக்காலத்தில் வள்ளல் அவர்கள் காலமான செய்தி தமிழகத்தின் பல இடங்களுக்கும் போய்ச் சேர்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் ஏற்கனவே வள்ளலைப்பற்றி கேள்விப்பட்ட புலவர் ஒருவர் கிழக்கரைக்கு اس حا