பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில ஊர்கள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 'தண்டலையார் சதகம்” என்ற சிற்றிலக்கியத்தின் இறைவன் தண்டலத்தில் உள்ளவர் தண்டலை யார் GT (T குறிப்பிடப்பட்டிருப்பது இந்த தண்டலம் என்ற சொல்லின் அடிப்படையில் எழுந்ததாகும். முந்தைய அனுத்தொகை மங்கலம் என்ற பெருநகர் மிகச்சிறப்பாக விளங்கி வந்த காரணத்தினால் அந்த ஊரின் கிழக்கு மேற்கு பகுதிகளும் கீழைக்கரை, மேலைக்கரை என வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஊகிக்கப்படுகிறது. கி.பி.1.195 -ல் இன்றைய ஏறுபதியில் ஷஹீதான சுல்த்தான் செய்யது இபுறாகீமர் வலி யு ல்லாவற் அவர்களது வ.பாத்துக்குப்பிறகு நூறு ஆண்டுகள் கழித்து கடல்கோள் ஏற்பட்டதை "ஷஹிது சரிதை” என்ற நூல் தெரிவிப்பதுக் கி.பி.1480 -ல் கிழக்குக் கடற்கரையில் மிகப் பெரிய சூறாவளிக்காற்றினால் கடல் அழிவு ஏற்பட்டு இன்றைய சிறு திவுகள் புதிதாக தோன்றியதையும், பார்பன் நீரிணைப்பு அகலமாகியதையும் "இராமநாதபுரம் மேனுவல்” என்ற நூல் குறிப்பிடுவது இங்கு ஆராயத்தக்கதாக உள்ளது. மேலே கண்ட இரு கடல் அழிவுகளில் ஒன்றினால் அனுத்தொகை மங்கலம் என்ற பெருநகர் முழுமையாக அழிவு பெற்றதின் காரணமாகவும் அதன் கிழக்குப்பகுதி மட்டும் சற்று மேடாக அமைந்திருந்து காலத்தின் பேரழிவைச் சமாளித்து தின்றதால் ஊரின் முழுப்பெயர் மறைந்து முந்தைய கீழைக்கரை என்ற கிழக்குப் பகுதியே இன்றைய ஊரின் பெயராக மாறிவிட்டது எனலாம். இதனை அண்மையில் கீழக்கரை மாயாகுளம் எல்லையில் நடத்தப்பட்ட கள ஆப் வில் கண்டுபிடிக்கப்பட்ட கலவெட்டு ஒன்று உறுதிப்படுத்துகிறது. இந்தக் கல்வெட்டின் வாசகப்படி அந்தப்பகுதியில் கி.பி. 1425-ல் 'ஷக்கூர்” என்பவர் மரணமுற்றதை அந்தக்கல்வெட்டு حا டாக்டர் எஸ்.எம். கமால் 조2 -N r தொண்டை மண்டல கடற்கரையில் தண்டலம் என்ற பெயருடன் اس