பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<82 செந்தமிழ் வள்ளல் சீதக்காதி தெரிவிப்பதுடன் அதே பகுதியில் இன்னும் பலர் ೨-೫೮) செய்யப்பட்டதற்கான கலவெட்டுக்களும் அங்கு உள்ளன. இவைகளிலிருந்து அங்கே தண்டலை மேலக்கரையில் ஒரு பெரிய முஸ்லிம் மக்கள் குடியிருப்பு அமைந்திருந்து, கி.பி. 1480-ல் ஏற்பட்ட கடல் அழிவினால் சேதமுற்றதை எளிதில் அறிந்துகொள்ளத்தக்கதாக இருக்கிறது. மேலும் இந்தப்பகுதிக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள தில்லையேந்தலில் இந்த ஊரின் தொன்மையைக் குறிக்கும் பொருள்களாக (சுமார் நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்) கீழக்கரையின் மாவிலாத் தோப்பு பகுதியில் சீனநாட்டு பொற்காசுகள் ஏழு கண்டெடுக்கப்பட்டு இராமநாதபுரம் இரண்டாவது வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அதனை உரிமை கொண்டாடுபவர் எவரும் இல்லாததால் அந்தக் காசுகள் ப்ொதுஏலத்தில் விடப்பட்டு விட்டன. இந்தக் காசுகள் (மாத்து குறைந்த பொற்காசுகள்) சீன நாட்டைச் சேர்ந்தவை என்பதைக் குறிக்கு வகையில் அந்தக் காசுகளில் சீன நாட்டு நாகப் பார்புகள் உருவமர் பொறிக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். மேலும் கீழக்கரையின் பழமையைக் குறிக்கும் இந்த சான்று ஆதாரங்கள் மறைந்ததைப் போன்று இன்னும் இரு வரலாற்றுத் தடயங்களான சீனநாட்டுப் பளிங்குக் கோப்பைகள், தட்டுக்கள் உடைந்தவை தொகுதியாக இன்றைய கலங்கரை விளக்கப்பகுதியில் கிடந்ததையும் அதனையடுத்து கடற்கரையில் அப்பொழுதைய பேருராட்சி தலைவர் மர்ஹார் A.S.V.M. சேகு அப்துல் காதர் அவர்களது கிட்டங்கிக்கு அருகில் இரண்டு செவ்வக வடிவமுடைய கல் நங்கூரங்களும் மறைந்து விட்டன. இந்த கல் நங்கூரங்கள் அரபுநாட்டிலிருந்து வந்த கப்பல்களில் பயன்படுத்தப்பட்டவை. நீண்ட சதுரவடிவம், மத்தியில் வட்டமான துளை உள்ளவை. இத்தகைய கல் நங்கூரங்கள் இந்தக் கடற்கரையில் பெரியபட்டினத்திலும், பார்பன் அருகிலும், தொண்டியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கல் நங்கூரங்கள் கி.பி.பனிரெண்டார் நூற்றாண்டைச் ار حا