பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@ புெலவர்கள் பெருமித்ததுடன் புகழ்ந்து வாடிவுள்ளனர். தமிழ்) இலக்கியங்களில் இத்தகைய சிறப்பான நிலையிலிருந்த வணிகர் எவரையும் காண்பதற்கு இயலாததாக இருக்கிறது. ஒரு மன்னரைப் போன்று வாழ்ந்து வந்த மரைக்காயர் அவர்களுக்கு அவரது மரபு வழியில் வந்த வள்ளண்மையும் பொருந்தி இருந்ததில் வியப்பில்லை. இதன் காரணமாக "ஈதல் இசைபட வாழ்தல் ” என்ற இனிய வாழக்கை இலட்சியங்களைக் கொண்டு எளிய வர்களுக்கு மர், இரவலர்களுக்கும், புலவர்களுக்கும் ஈந்து மகிழந்தார். இதனை “ ஈந்து சிவந்தது வள்ளலது இருகரங்கள் ” எனப் புலவர்கள் அவரை வாயார வாழத்திப் பாடியுள்ளனர்.