பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

延發 ÉCOLE FRANÇAISE D'EXTRÊME-ORIENT = CENTRE DE PONDICHÉRY P.O Box No. 151 Ýr 16 & 19 Dumas Street Ar Pondicherry 605001 Ar India முனைவர் கோ. விசயவேனுகோபால் கல்வெட்டுத்துறை, பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனம் பாண்டிச்சேரி. அணிந்துரை கெழுதகை நண்பர் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் அண்மையில் எழுதியுள்ள "செந்தமிழ் வள்ளல் சீதக்காதி" எனும் நூலைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். நூல் பன்னிரு இயல்களில் பாங்குற அமைந்துள்ளது. முதலாவது இயலில் கீழக்கரை ஊர் வரலாற்றையும், பழமைச் சிறப்பையும், கல்வெட்டுக்கள், பிறநாட்டார் குறிப்புக்கள் போன்ற சான்றாதாரங்கள்வழி நிறுவியுள்ளார். இரண்டாம் இயலில் கீழக்கரையைப் பற்றிய பழமையான போர்ச்சுகீசிய ஆவணங்கள் வழிக் கீழக் கரை மரக்காயர்கள் செய்த முத்து வணிகம், கேரள மன்னர் - போர்ச்சுகீசியர் கொண்டிருந்த உறவுகள், கீழக்கரையின் பழைய பெயர்கள் எனப் பல சுவையான வரலாற்றுச் செய்திகளைப் புலப்படுத்தியுள்ளார். மூன்றாவது இயலே நூலின் நாயகரான வள்ளல் சீதக்காதிபற்றி அமைந்துள்ளது. முன்னிரு இயல்கள் பின்னணிகளைப் புலப்படுத்துவன. இவ்வியலில் தரப்பட்டிருக்கும் வள்ளலின் முன்னோர்களைப் பற்றிய குறிப்புக்கள் பின் அவர்தம் வாழ்வு நெறியைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இவ்வகையில் டச்சுக்காரரின் குறிப்புகள் தக்கவகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இக் குறிப்புக் களி ல் உள்ள தெளிவின்மையையும் ஆசிரியர் எடுத்துக்காட்டிப் ”பெரிய தம்பி” என்ற பெயர்வழக்கு வள்ளல் சீதக்காதியையும் அவர்தம் தந்தையாரையுமே குறிக்கும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்த இயல் சேதுபதி மன்னரோடு வள்ளல் கொண்டிருந்த உறவுநிலைகளை விளக்குகிறது. இங்கும் பழைய டச்சு ஆவணங்கள், இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் ஆகியவற்றின் துணைகொண்டு வள்ளலின் தொண்டுகளைச் சிறப்புற விளக்கியுள்ளார். மேலும் வள்ளல் செய்த மற்றொரு முக்கியப் பணிபற்றியும் எடுத்துக் காட்டியுள்ளார். இப்பணி பாரசீக மொழியைப் பொதுமொழியாகச் செய்த பணியாகும். இதனை ஆசிரியர் சமஸ்தான ஆவணங்களில் காணப்படும் பல பாரசீகச் சொற்களை எடுத்துக் காட்டி நிறுவுகின்றார். சேதுமன்னர் -