பக்கம்:செம்மாதுளை .pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

என்ற ஆத்திரம் தேவனை நிலைக்கொள்ளச் செய்யவில்லை. ஒழுங்காக ஓடிய மாடுகளை ஓங்கி அடிக்க வைத்தது. திருகி. நிற்கும் மீசைக் கொத்தின் கொழுந்தை மேலும் மேலும் முறுக்கிவிடத் தூண்டியது. பட்டமங்கலத்தில் ஆதப்பன் துடித்தபோது- விட்டேன பார் என்து வீறு கொண்டு எழுந்தபோது-பெருந்தன்மை சில நேரங்களில் கோழை என்ற பட்டத்தையும் சூட்டிவிடக் கூடும் என அவன் தர்க் கம் செய்தபோது-அமைதி அமைதி என்று சாந்தப்படுத் திக் கொண்டு வந்த தேவன் இப்போது கொதித்துப் போயிருந்தான். விருந்துக்கு வருந்தியழைத் தபின் வீடு தேடிப் போனவர்களை வா என்று அழைக்க நாதியில்லையே! தேவன் காலத்தில் தேவனுக்கே இந்த அபகீர்த்தி கேவலம் அவன் பிணத்தை என் ஒட்டுச் செடிக்கு உரமாகப் போட் டால் தான் என் மனம் ஆறும்’-என்று வேலித்தேவன் பலமுறை தன்னையுமறியாமல் ப ல் லை க் கடித்துக் கொண்டு கர்ஜித்திருக்கிருன். பாகனேரிக்கும் பட்டமங்க லத்திற்கும் இடையிலே கொஞ்ச தூரம்தான் என்ருலும் அதற்குள் ஐந்தாறு தடவை தேவனுக்கு மதம் பிடித்திருக் கிறது. ஆனல் வழக்கம் போல தேவனைத் தடுத்து நிற்கும் கல்யாணியின் அன்பு முகம் அன்றும் அவனது தாங்கொ ளுக் கோபத்திற்குக் கல்லணை போட்டு விட்டது. மருமகன் பிறப்பான். வேலும் வில்லும் கற்றுக் கொடுத்து அவனே வீரனுக்க வேண்டும் என்ற ஆசை அன்று வரை கூட வேலித் தேவனின் மனதைவிட்டு அகவவில்லை என்ருல் ஆசையின் எதிரே கெளரவம் எந்த மூலைக்கு?

அந்தி சாய்ந்துவிட்டது. வேலியும் ஆதப்பனும் பாக னேரிக்குள் நுழையும்போது விளக்கு வைத்தாகி விட்டது. கவுதாாரியும் சின்னக்கோழியும் காவற்சட்டைகள் மாட்டிக் கொண்டு வாசற் சிப்பாய்களாக நின்ருர்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/33&oldid=565947" இலிருந்து மீள்விக்கப்பட்டது