பக்கம்:செம்மாதுளை .pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

வைரமுத்தனின் இந்த வீம்புப்பேச்சை, கல்யாணி முகத்தை மூடிக்கொண்டே கேட்டுச் சகித்தாள் வலையில் அகப்பட்ட கலைமான் தானே அவள் கொம்பில்லாத, மானும் கெளரவத்தைத் துறந்த மனிதர்களும் எப்படியும் தப்பித்து விடலாம்! மானமும் மரியாதையும்தானே அவ. ளுக்குப் பேச்சும் மூச்சும்! கணவனின் வேட்டு முழக்கத்திற். கெல்லாம் அவள் கண்மூடி மெளனியாகவே இருந்தாள்.

"ஏண்டி உனக்குத்தாண்டி சொல்கிறேன். ஊருக்கா பிரசங்கம் செய்யறேன்னு நெனச்சே!” என்று எரிந்து விழுந்துகொண்டே கல்யாணி மூடியிருந்த போர்வையைத் துாக்கி எறிந்தான். அந்தக் கம்பளிப் போர்வை அந்தக் கோயில் வீட்டுக்குள் எரிந்து கொண்டிருந்த குத்து விளக் கைப் போர்த்திக் கொண்டது, விளக்கு அணைந்தது. முல்லையை மறைக்க மூடிய இருளுக்கு வகையுண்டு. முல்லே யின் மணத்தை மறைக்கமுடியுமா? கோயில் வீடு இருண்டு. விட்டது: ஆனல் கல்யாணி சூடியிருந்த முல்லைப்பூ வாடை இரவோடு இரவாக கலந்து வீடு முழுவதும் பரவியது.

  • நல்ல நாள் பெரிய நாளேக்குக் கூடவா இப்படிக் குதிக்க வேண்டும் அடுத்த வீடு, எதிர்த்த வீடுகளிலெல் லாம் இப்ப்டியா நடக்கிறது!" என்று அன்பொழுக பணிவு:கொஞ்ச,படுத்துக்கொண்டே கேட்டாள் கல்யாணி.

பதிலில்லை:

கல்யாணி வைரமுத்தன் நின்ற இடத்தைக் கைகளால் தடவிப் பார்த்தாள். அவன் இல்லை.

இதயத்தில் :பொங்கியெழும் ஆத்திரம் பழி கொள்ளா - மல் போவதில்லை. உடும்பைப் பதம்பார்க்க முடியாவிட்

டாலும் ஒளுனையாவது சந்தித்து விட்டுத்தான் போகப் பார்க்கிறது. வைரமுத்தன் வஞ்சந் தீர்த்துக் கொண்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/32&oldid=565946" இலிருந்து மீள்விக்கப்பட்டது