பக்கம்:செம்மாதுளை .pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்த வீரனைலும் தமிழர் இல்லங்களில் கோயில் வீட்டுக்குள் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். கணவனல் துன்புறுத்தப்படுவோருக்கும் மாமியாரின் சீற்றத்துக்கு ஆளாகும் பூங்கொடிகளுக்கும் அந்தக் கோயில் வீடுகள் தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியிருக்கின்றன; வெண்கலக் குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அதன் முடியில் மரிக் கொழுந்து மாலையைச் சுற்றியிருப்பார்கள்: சந்தனம், வெற்றிலை பாக்கு குங்குமம் இவையெல்லாம் எப்போதும் ஒரு தட்டில் வைத்திருப்பார்கள்: சரியாகவோ தவருகவோ அந்த அறையைத்தான் தமிழர்கள் பன்னெடுங்காலமாகக் கோயில்வீடு என்றும் அதுதான் அந்த வீட்டிலேயே புனித மான இடம் என்றும் கூறி வந்தார்கள்:

கல்யாணி அந்த அறைக்குள்தான் முடங்கிக் கிடந் தாள். "அண்ணன் இருவரும் வருவர். அத்தான் அன்புடன் பழகுவார்' என்று எண்ணிக் கிடந்த தாமரைக்குள நெஞ்சத்தை வைரமுத்தன் கலங்கடித்து விட்டான். குளம் கலங்கி அதற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்த தாம ரைக் கொடிகளும் நைந்து போயிருந்தன. அவளுடைய விக்கல் சத்தம், தேடிக்கொண்டிருந்த வைரமுத்தனைக் கோயில் வீட்டுக்கு இழுத்து வந்தது.

"என்னடி நாடகம் நடத்துகிருய்? சீமான்கள் வருகைக் காக சிங்காரமெல்லாம் பலமாக இருக்கிறதோ! பசிக்குப் பனம்பழத்தைக் கூடச் சாப்பிடுவான். ஆனல் பழிவாங்க நினைத்தால் சும்மா விடமாட்டான் வைரமுத்தன்! பாகனிப் பயல்களிடம் இதை மறந்திட வேண்டாமென்று சொல்லி விடு. விருந்தாம்! வரவேற்பாம்! ஆசாமிகள் இருந்திருந் தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா? கோயிலிலே பட் டைச் சாதம் வாங்கிக் கொடுத்து ஊர் சிரிக்க வைத்திருப் பேன்." - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/31&oldid=565945" இலிருந்து மீள்விக்கப்பட்டது