பக்கம்:செம்மாதுளை .pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

விட்டு ஓடிவிடுவான். அப்போதெல்லாம் அவளுக்கு இந்தக் காளையைக் கொன்று விடலாமா என்றுகூடத் தோன்றி விடும்! பாவம்! மற்ருெரு சமயம் இனி எப்போது வாய்க்' கப்போகிறது என்று ஏங்கித் தவிப்பாள் கணவன் தொட்டு மகிழ்ந்த கன்னத்தைத் தடவிப் பார்ப்பாள் அதில் ஒரு இன்பம் அவளுக்கு இந்தத் தனிச்சிறப்பைத் தமிழ்ப் பெண் களிடம் தானே பார்க்க முடிகிறது. உடலுக்கும் உள்ளக் திற்கும் தொடர்புப்படுத்தி வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்தது. தமிழகம்தானே! அதனுல்தான் தமிழ்ப்பெண், கணவனிடம் உயிரை வைக்கிருள். மஞ்சள் கயிற்றில் வாழ்க்கையை எதிர்பார்க்கிருள்.

6% . పి - 3%

மண் குதிரையின் அணி வகுப்பு மைதானம் சேர்ந் தது. திருவிழாவுக்கு வந்திருக்கும் பாகனேரி மைத்துனர் களே அவமானப்படுத்த நெடு நாட்களாகத் திட்டம் வகுத் திருந்த வைரமுத்தன் அன்று அந்தப் பணியைத் தீரித்து விட நினைத்தான். வாளுக்கு வேலியை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு இல்லை யென்று சொல்லிவிட வேண்டு மென்பது அவனது திட்டம். ஆனல், அந்த ஆசையில் தீ வைத்தாற்போல் அவனுடைய பண்ணைக்காரன் ஓடி வந்து, "பாகனியாரு கோபமாய்ப் போய்ட்டாருங்க' என் முன்: வைரமுத்தனின் ஏமாற்றம் வெறி உருவெடுத்தக. கல்யாணி என்று கத்தின்ை பதில் இல்லை. ஏண்டி வைரமுத்தனை உங்க வீட்டுக் கிள்ளுக்கீரையினு நெனச் சுக்கிட்டியா ?’ என்று பொரிந்துகொண்டே கொல்லைப் பக்கமாகப் போய்ப்பார்த்தான் வீடு வெள்ளை இரவு போல் நிசப்தமாக இருந்தது. எங்கே அவள்?

மனக் கவலை பிணியாக மாறி அந்த மாந்தளிர்மேனியை ஆவதைத்துக் கொண்டிருந்தது. கம்பளியால் உடம்பை முடிக் கொண்டு கோயில் வீட்டுக்குள் படுத்துக் கிடந்தாள். விண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/30&oldid=565944" இலிருந்து மீள்விக்கப்பட்டது