பக்கம்:செம்மாதுளை .pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

குக் கொஞ்ச காலமாக ஒரு சூத்திரமாகவே இருந்து வந் தது. கல்யாணியின் அழகு முகத்தைக்கூட அவன் அன் போடு பார்த்ததில்லை. ஊரெல்லாம் வர்ணிக்கும் அவளு டைய அடக்கத்தைப் பற்றி! ஆனால் உரிமைப்பட்ட வைர முத்தன் அவளை உதறித் தள்ளினன்; வற்றக் காய்ச்சிய பாலி வாசனைத் திரவியங்கள் போட்டு வாஞ்சையோடு கொண்டுவந்து கொடுப்பாள். அதை நாய்க்கு வைத்துப் பரிசோதிப்பான். வனிதை நெஞ்சுருகுவாள்! வைரமுத்தன் உள்ளத்தை இரும்பாக்கிக் கொள்வான் என்றைக்காவது கல்யாணி மஞ்சட் குளித்து மலர் சூடிவிட்டால் முத்தன் அன்று முழுவதும் வீட்டுக்கே வரமாட்டான்; நோய்வாய்ப் பட்டுக் கிடக்கும் அவனது காளையைக்கூட அன்று மறந்து விடுவான்; மனைவியின் முகத்திலே சந்தோஷத்தைப் பார்ப்ப தென் ருல் அவனுக்கு அவ்வளவு கசப்பு:

சர்வவல்லமை படைத்த சாம்ராஜ்யாதிபதிகளைக் கூடச் சபலம் எளிதில் வசப்படுத்திவிடுகிறது. ஆனால், வைர முத்தனை வசப்படுத்திய சபலம் முடிவில் சக்தியற்றுப் போய்விட்டது-பலமுறை! திடீரென்று எப்போதாவது கல்யாணியின் வனப்பைப்பற்றி வைரமுத்தன் யோசிப் பான். தன்னைப் பாக்யசாலி என்கிருர்களே அது கல்யா னிக்குக் கணவனுக இருப்பதால் தானே என்று மூச்சு விடுவான். நிலர்க் காலத்தில் அவனையறியாமல் பலமுறை கல்யாணியைத் தொட்டுப் பழகியிருக்கிருன். கன்னத்தைத் தடவித் தடவி இன்புற்றிருக்கிருன், அவளுடைய வழு வழுப்பான முகத்தைத் தடவிச் சுவைபெறும்போது, குயி லின் குரல்போன்ற இனிய பாடலை, இசைத்துறையில் ஞானம் பெற்ற ரசிகன் கண்களை மூடிக்கொண்டு ரசிப்பது போல் வைரமுத்தன் கண்களை அறைகுறையாக மூடிக் கொண்டு விடுவான். ஆனல் அந்த இன்பம் நீடிப்பதில்லை, கட்டுத் துறையில் வேதனைப்பட்டுக் கிடக்கும் அவனது காளை திடீரென்று அம்மா' என்று கத்தி விடும், முத்தன் உள்ள்மும் மாறிவிடும் வெடுக்கென்று கல்யாணியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/29&oldid=565943" இலிருந்து மீள்விக்கப்பட்டது