பக்கம்:செம்மாதுளை .pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

ஆதப்பனுக்குக் கவலையும் துக்கமும் மேலிட்டுக் கண் கள் சிவந்து, 'கல்யாணி! அவள்தான் இந்தச் சோகச் செய்தியைச் சொல்லியனுப்பி யிருக்கிருள். அவளால் துன்பத்தைத் தாங்க முடியவில்லையாம்... ஆதப்பன் சொல்லி முடிக்கவில்லை. வாளுக்கு வேலியின் முகம் சேரன் செங்குட்டுவனின் முகத்தைப் போல், ஈச்சங்காய் நிறம் பெற்றது. இதயத்தில் இடி இடித்தது. கண்களினின்று மின்னற் கொடிகள் பறந்தன. வேலித் தேவன் ஒன்றும் பேசவில்லை; அவனுடைய அமைதிக்குறி, அடுத்து வீச விருக்கும் பெரும் புயலுக்கு முன் அறிவிப்பாகயிருந்தது.

ஆதப்பா வண்டியைப் பூட்டு' என்று சொல்லிக் கொண்டே வேலி எழுந்தான். பட்டமங்கலத்து வீதி யையே கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்த ஆதப்பன், வேலியின் பக்கம் திரும்பி, 'கல்யாணி?’ என்ருன்.

கல்யாணியா? ஏன் அவள் புருஷன் வீட்டில் இருக் கிருள்." *

வேலியின் இந்தச் சாதாரணமான பதில் ஆதப்ப னைச் சித்திரவதை செய்தது. கல்யாணியின் தலை பிளவுகள் பாய்ந்து ரத்தம் அதிலிருந்து வடிவது போன்ற நினைவுச் சித்திரங்கள் ஆதப்பனின் மனதில் தோன்றி மறைந்தன. கலங்கிய கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டான். ஆளுல் குமுறிக்கொண்டிருந்த நெஞ்சைக் குளுமைப்படுத்த அவ ஞல் முடியவில்லை. ... "

t) tు ஃ 8%

'காளையை மடக்கினர்கள்! வாலையும் அறுத்தார் கள்! அவர்களைப் பழி வாங்காது விடுவதா? பைத்தியக் காரர்கள்! பட்டமங்கலத்தான் பாவை மோகத்தால் தான் கல்யாணியைத் திருமணம் செய்துகொண்டதாக நினைக்கிருர்கள்’-இந்தப் பேச்சுத் தான் வைர முத்தனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/28&oldid=565942" இலிருந்து மீள்விக்கப்பட்டது