பக்கம்:செம்மாதுளை .pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

விட்டாய் ! ஒளவையார் அதை அவமானமாகக் கருத வில்லையே! அதுமாதிரிதான் வைரமுத்தர், நம்மிடத்திலும் நடந்து கொண்டிருக்கிருர் தம்பி......"-வாளுக்குவேலி பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். ஆதப்பனைக் காண வில்லை: கண்மாய்க் கரையின் இறக்கத்தில் யாரோ ஒரு முகம் தெரியாத ஆசாமியுடன் ஆதப்பன் பேசிக்கொண் டிருப்பதைக் கண்டான், தனக்குத்தானே சிரித்துக் கொண்டு உள்ளன்போடு மூர்க்கன், மூர்க்கன் என்று முனங்கின்ை வாளுக்குவேலி. அதற்குள்ளாக ஆதப்பன் வேலியின் பக்கத்தில் வந்துவிட்டான்.

"என்ன ஆதப்பா! யாரவன்? சொக்கநாத புரத்துப் பெரிய கருப்பன் மாதிரியல்லவா இருக்கிறது -வாளுக்கு வேலி ஆவலோடு கேட்டான்.

பெரிய கருப்பனுமில்லை, சின்னக்கருப்பனுமில்லை! அப்போதே சொன்னேன், அவசரக்காரனென்றீர்கள். என்ன ஆகிவிட்டது தெரியுமா?’-ஆதப்பன் கனல் கக்கினன், - -

"ஏன் ஆத்திரப்படுகிருய்? எவன் என்ன செய்துவிட முடியும் நம்மை? வீட்டிலே காயும் புலித் தோல்களைப் பார்த்தால்கூட எதிரி கலங்கிச் செத்துவிடுவானே! நடந்த தைச் சொல்-வேலி மெதுவாகக் கேட்டான்:

என்ன இருக்கிறது? விருந்துக்கு அழைத்து, நம் முகத்திலே கரிபூச நினைத்தாராம் வைரமுத்தர்! பட்ட மங்கலம் நாடே ஜே. ஜேஃப் போடுகிறது. வேட்டு முழக்கம், ஊரைக் கிடுகிடுக்க வைக்கிறது. இல்லமெல்லாம் விருந்தாளிகள் நிறைந்திருக்கிருர்கள். வைரமுத்தர் வீட்டில் உலேயே வைக்கவில்லையாம்! நெஞ்சு வேகிறது-ஆதப்பன் கர்ஜித்தான்.

கல்யாணி என்னஆளுள்:

S S S S S S S S S S S S -அப்போதுகூட கல்யாணி யின் கவலைதான் வாளுக்குவேலிக்கு. ... . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/27&oldid=565941" இலிருந்து மீள்விக்கப்பட்டது