பக்கம்:செம்மாதுளை .pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7ty

அசைவிலும் நெளிவிலும் அர்த்தம் பிரித்துப் பார்ப்பதில் கைதேர்ந்தவர். வடிவாம்பாள் இவ்வளவு சர்க்ரையாகப் பேசியதைக் கண்டால் சும்மா விடுவாரா? அன்று மாலேயே அந்தி சாய்ந்ததும் வைரமுத்தனே வடிவாம்பாள் வீட்டுக்கு விருந்தாளியாக்கி விட்டார். தேரோட்டத்தன்று சமைப் பதற்கென வைத்திருந்த வெள்ளே முயல் அன்று இரவே மரண தண்டனை பெற்றது. அன்று மாலைவரை உரித்தாகக் கவனிக்கப்பட்ட உறவினர்கள்கூட வைரமுத்தனின் வரு கைக் குப் பிறகு ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களேப் போலா ஞர்கள். ஏ. தென்றலே நீ தெற்கே போகிருயா அங்கே சந்தனக்கட்டையை விறகாக்கிச் சோறு பொங்குவார் களே. அந்த அழகிய பொதிய மலைத் தலைவனுகிய பாண்டி யனிடம், நான் வைத்த அன்பினுல் என் கைவளை நழுவி விழுந்துவிட்டதெனச் சொல்!” என ஏங்கிக்கிடந்த பாண்டிக் குமரிப்போல வாழ்ந்து வந்த வடிவாம்பாளின் இல்லத்திற் குப் பிரசித்திபெற்ற கள்ளர் செல்வன் வந்துவிட்ட பிறகு அவளுக்கு உறவினர்கள் என்ன அவ்வளவு பெரியதாகி விடப் போகிரு.ர்கள்!

வைரமுத்தனுக்கு ராஜ உபச்சாாம் நடத்தினுள் வீட் டில் வதங்கும் செண்பக மலரைப்பற்றி அவன் கவலைப் படவில்லை. காந்திமதி முகத்துடைய கல்யாணியின் கண்ணிர், வைரமுத்தனுக்கு வடிவாம்பாள் தெளிக்கும் வாசனை நீர்த்துளிகளாகப் பட்டன.

தேர் நிலைக் குத்தியது. திருவிழாவும் அழகாக முடிந் தது. ஆனால், வைரமுத்தன் வடிவாம்பாள் வீட்டுக்கு நிரந்தர விருந்தாளியாகி விட்டான். பிள்ளை போட்ட முடிச்சு அல்லவா? வடிவாம்பாள் வீடு என்று திருக்கோஷ்டி யூரிலே வழங்கி வந்த சொல் இரண்டு மாத காலத்திற்குள், 'அம்பலகாரர் வீடு என்று மாறிவிட்டது. அவ்வளவு முக்கியத்துவம் பெற்று விட்டான் முத்தன். திருக்கோஷ்டி யூர் பஞ்சாயத்துகளில்கூட உரிமையோடு கலந்துகொண்டு நடுநிலை நின்று முடிவு கூற ஆரம்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/71&oldid=565985" இலிருந்து மீள்விக்கப்பட்டது