பக்கம்:செம்மாதுளை .pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

" எப்படி மாமா நீங்க ஒரே இடத்திலே இருக்கீங்க! உங்களுக்கு அது பிடிக்காதே!'

  • பிடிக்காதுதான் என்ன பண்ணித் தொலையிறது! வேலைக்குப் போகாட்டி நாட்டார் கோபிச்சுக்கிருங்க. அப்புறம் மிராசுக்கு ஆபத்து வந்திடும்; அதுக்காகவாவது போகனுமே! ஆன ஒண்னு! பொழுது போக்க ஒரு பிள்ளையாண்டான் கிடைச்சாரு தங்கப்புள்ளே. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவருதான். நாட்டமானவருங்கூட?
  • அது யாரு மாமா? புதுசா இருக்குது? வீரக்காளே வைரமுத்தரைச் சொல் lங்களாக்கும்!"

அதெப்படித் தெரியும் ஒனக் கு! பட்டம் வேறே புதுசாச் சொல்றியே! -

-பேர் பெத்த மஞ்சி விரட்டுக்காளை வச்சிருந்தாரே அவரைத்தானே மாமா சொல் lங்க!...அவரைப்பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். ஆளைப் பார்த்தது கிடையாது மாமா!. நீங்க அப்படி மனுஷர்களேயெல்லாமா விருந்துக்குச் கூட்டிக்கிட்டு வர்றிங்க!' -

பைத்தியக்காரப் பொண்ணு இருக்கியே; நான மாட் டேங்கிறேன். உங்க அக்காளுக்குத் தெரிஞ்சா என்னைக் கோவிச்சுக்குவாளேன்னு பார்த்தேன். நீ ஒத்துக்கும்போது எனக்கென்ன கண்ணு!”

நம்ப வீட்டுக்கு வர்ரதுக்கு அக்காளென்ன தங்கச்சி என்ன! அவுங்களும் நம்பளுந்தான் ஒருத்தர் வீட்டிலே ஒருத்தர் கை நனைச்சுக்கிறதில்லேன்னு போச்சே! இனி யாருக்குப் பயம் மாமா? யாரும் யாருக்கும் படியளக் கல்லே!-என்று வடிவு வார்த்தைகளைக் கொட்டினள்:

பிள்ளை இருக்கிருரே, அவர் ஊசி நுழையும் இடத்தில் ஒட்டகத்தை நுழைக்கப் பார்க்கும் பலே ஆசாமி. ஆளின்

2016 —5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/70&oldid=565984" இலிருந்து மீள்விக்கப்பட்டது