பக்கம்:செம்மாதுளை .pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

பொறுப்பாளா தமிழச்சி! கொதித்தாள்! போதும் அத்தான் போதும்! இந்தப் பொல்லாத கண்கள் பொறுத் கித் தந்த புருஷன் இவாசித்தளித்த பட்டம் போதும்: புருஷன் வெறுத்தால் பிரிந்திருப்பாள் மறத்தி; ஆனல் புறம் பாய்ந்து வாழமாட்டாள். கண்காணுத் துரத்தில் பூத்து மலர்ந்து, புதுமணம் வீசி, பின் கருகிச்சாகும் காட்டு முல் லையைப் போன்றவள் தமிழ்ப் பெண். கணவன் விழித்திருக் கக் கண்மூடி பூவாடைக் காரியாகப் புதைக் குழி சென்ருல் புவனம் அவளைப் பூஜிக்கும்; ஆனால், கணவனுக்குப் பின் அவள் வாழ்ந்தால், செத்தவன் கட்டிய தாலிக் கயிறு அவளுக்குத் தூக்குக் கயிருகும்! கேவலமாகப் பேசாஇர் கள். வைரம்பாய்ந்த குடும்பத்தில் பிறந்தவள்! பாதுகாப் பில்லாத தோட்டத்தில் பளிங்கு விழிமானை விட்டுப் போனதைப் போல போய்விட்டீர்கள். மேலைவான் சிவந்த ததும் மயானத்திற்குப் போய்விட்டு, காலை வான் சிவந்த தும் உயிர்பெற்று வருவதுபோல் இருக்கிறது என் வாழ்க்கை எத்தனை நாளேக்கு இந்த இருட்டறைக் குடித் தனம்! கல்யாணி கெஞ்சிள்ை: இத்தனை காலமும் அவ ளுடைய உதடுகள்தான் ரோஜாப்பூவை ஒட்டி வைத்தது. போல இருந்தன. ஆனால், அன்று அவளுடைய கண்களுக் குப் பதில் இரண்டு செவ்வரளி மொட்டுகளைத் தைத்து வைத்ததுபோலத் தோன்றிற்று. 'முகத்தை மூடிக்கொண்டே கண்களைத் தேய்த்துத் தேய்த்து ரத்தத்தைப் போல சிவக் கடித்துக் கொண்டாள் தூயவள் தேம்பலை முத்தன் எப் படிச் சக்தியுள்ளதென்று ஒப்புக்கொள்வான்: தமிழ் நாடு அவனை ஆண் பிள்ளை என்று மதிக்காது போய்விட்டால் என்ன செய்வது! அதற்காகவாவது கல்யாணியின் அழு கையை அலட்சியப் படுத்த வேண்டுமல்லவா! விர்! என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அவனுக்குத்தான் , இருக்கிறதே ஒரு பொது ஸ்தாபனம் சவுக்கை! இந்த நாட்களில் பூங்காக்கள், வாசகசாலைகள் பயன்படுவது போலத்தான் அந்த நாட்களில் கள்ளர் நாட்டில் சவுக்கை கள் பயன்பட்டன. மனைவியை அடித்துத் துன்புறுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/73&oldid=565987" இலிருந்து மீள்விக்கப்பட்டது