பக்கம்:செம்மாதுளை .pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

விட்டு வருபவர்கள்-மாதாவைத் திட்டி மடியிருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவருபவர்கள்-சித்தியின் கொடுமைக்கு ஆளானவர்கள்-இவர்கள் அத்தனை பேருக் கும் ஊரின் மத்தியில் அமைந்திருக்கும் சவுக்கைதான் புக் கிடம் கொடுத்து உதவியிருக்கிறது. வைரமுத்தனும் விளக்கு வைக்கும்வரை சவுக்கையிலிருந்துவிட்டு இருட் டானதும் வீட்டுக்குப் போனுன் பண்ணைக்காரப் பெருச் சாளி வாசலில் உட்கார்ந்திருந்தார்.

ஏண்டா பெருச்சாளி, வெளியாத்துரிலே கூத்தாமே “Gr Jгтд;3%ушгт ? ? ?

போகணும் எசமா, கஞ்சி குடிச்சுட்டுப் போகலாம்னு பார்த்தேன், நாச்சியாரைக் காணமே"-கள்ளர் நாட்டில் வீட்டுக் குடையவரின் மனைவியை நாச்சியார் என்றுதான் கெளரவமாகச் சொல்லுவார்கள்:

மகாராணி எங்கே போயிட்டாங்க ? என்று கிண்ட லாகக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் புகுந்து எல்லா இடங்களிலும் தேடினன் வைரமுத்தன். கோயில் வீடு, கொல்லைப்புரம் எல்லாம் தேடினன். தூர்ந்து போய்க் கிடக்கும் கிணற்றில் கூட இறங்கிப் பார்த்தான்: தூக்கிட் டுக் கொண்டாளோ என சமையலறைக்குள் சென்று பார்த் தான். நிலைப்படியில் அடுப்புக் கரியில்ை ஐந்து வரிகள் எழுதப்பட்டிருந்தன:

வாழ்க்கைப் பட்டேன்; வதைப்பட்டேன்; வளம் கண்டேனில்லை! வருகிறேன். உங்களுடைய கினை வாக என் உடம்பெல்லாம் கசையடித் தழும்புகள் இருக்கின்றன: அதுபோதும் அத்தான் விடை கொடுங்கள், !

-இந்த வாசகத்தை இரண்டு முறை படித்துப் பார்த் தான் வைரமுத்தன். மூன்ருவது முறை படிக்கும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/74&oldid=565988" இலிருந்து மீள்விக்கப்பட்டது