பக்கம்:செம்மாதுளை .pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அவன் தொண்டை கம்மியது. வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். அவன்திரும்பிய திசை, மாட்டுக் கொட் டம் வழக்கம்போல் அவன், குணம் மாறிவிட்டது: தொலைந்தது சனியன்! விட்டது பீடை என்று கணக்குத் தீர்த்தவனைப் போல தானகப் பேசிக்கொண்டு முற்றத்திற்கு வந்தான். வெளிக் கதவு தாளிடப்பட்டிருந்ததால் சற்று நேரத்திற்குப் பிறகு அவனுடைய நாய் காலால் கதவைச் சுரண்டியது அவன் காதில் பட்டது. உள்ளத்திற்கும் உட லசைவுக்கும் தொடர்பில்லாதவனைப் போல உட்கார்ந்: திருந்த வைரமுத்தன், தன்னையுமறியாமல் எழுந்து வந்து கதவைத் திறந்துவிட்டு' மறுபடியும் அதே இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். உள்ளே புகுந்த நாய் ஓடோடி வந்து மடியிலே விழுந்து புரண்டது.

"சீ! பொன்னி; போ! போ!' என்று அடித்துத் துரத் தின்ை முத்தன். பொன்னி போகவில்லை. அவன் காலடி யில் படுத்துவிட்டது. அப்போது முத்தன் காலில் ஈரம் தட்டியது. விளக்கினடியில் போய்ப் பார்த்தான். காலெல் லாம் ரத்தம். ரத்தம் எப்படி வந்தது ? அவனுக்கே புரிய வில்லை. விளக்கை பொன்னி கிடந்த இடத்துக்கு எடுத்துப் போனன், வீடு வருகிறவரை நிலைத்திருந்த பொன்னியின் உயிர் அந்தக் கணநேரத்தில் பிரிந்துவிட்டது. அது செத் துக் கிடந்த காட்சி வீரனையும் குலே நடுங்க வைக்கக் கூடிய தாக இருந்தது. அதன் காதுகள் இரண்டும் துண்டிக்கப் பட்டிருந்தன. வால் நறுக்கப்பட்டிருந்தது. அதன் கழுத் தில் கல்யாணியின் தாலி இறுகக் கட்டப்பட்டிருந்தது: திடீர்த் தாக்குதல் திரனையும் திகிலடையச் செய்துவிடு மல்லவா! எதிர்பார்த்தது நடந்து விட்டதைப் போல் தலையை அசைத்துக்கொண்டு பொன்னியின் பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/75&oldid=565989" இலிருந்து மீள்விக்கப்பட்டது