பக்கம்:செம்மாதுளை .pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

முத்தன் சித்தம் !

ஒலை கிடைத்ததும் சுந்தரியின் வீட்டிலிருந்து கிளம் பினன் வாளுக்குவேலி மான் வேகம் மழை வேகமாகப் பாகனேரி சேர்ந்தான். கொடியிறங்கிய கோட்டைபோல் பொலிவிழந்து கிடந்தது அவன் வீடு காலடி ஓசைகேட்டு வாசலுக்கு வந்தான் ஆதப்பன், தேவன் சிறுத்தையைப் போல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக்கொண்டு உள்ளே வந்துகொண்டிருந்தான்.

'அண்ணு! இனிப் பொறுக்கமாட்டான் ஆதப்பன், இம்’ என்று சொல்லுங்கள் இமைப் போதில் அவன் சிர சைக் கொய்து வருகிறேன். தங்கையைப் பார்க்க முடிய வில்லை அண்ணு! தங்கச்சிலைபோல் அனுப்பிளுேம். தகடு தகடாய்ப் பெயர்த்து அனுப்பியிருக்கிருன் கொடியவன்.'ஆதப்பன் அனலாகக் கொதித்தான்; அரைக் கணமும் தாம தியேன் என்று முழங்கினன்.

'பொறு தம்பீ! கல்யாணியைக் கூப்பிடு, கதையைக் கேட்போம்! காலம் வரும்போது தலையைக் கொய்ய உன்னைத்தானே அனுப்புவேன். என் க்ரத்தால் அவன் சிரசை ஒருபோதும் கொய்யமாட்டேன். என் கரம் புலி யடிக்கும் கரம்"

வாளுக்குவேலி தம்பியைச் சமாதானப்படுத்தி விட்டு கல்யாணியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கல்யாணி வரவில்லை. உள்ளிருந்து, கல்யாணியின் உடன் வந்த நாய்தான் வந்தது. தேவன் எழுந்து உள் கட்டுக்குப் போன்ை. அங்கே கல்யாணி துணில் சாய்ந்தபடி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். தேவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். கல்யாணிதான என்று அவனுக்குச் சந்தேகம்: முகமெல்லாம் கோடு கோடாய் ரத்தக் கட்டு கள். முதுகிலே கயிறு பின்னியதைப்போல் பிரம்படி: கூடாது இனி எனக் குப்பை மேட்டுக்குத் துரக்கியெறியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/76&oldid=565990" இலிருந்து மீள்விக்கப்பட்டது