பக்கம்:செம்மாதுளை .pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

கூட அப்படித்தான் எண்ணி யிருப்பார்கள். இல்லா விட்டால் பவ்யமாகவும் பக்தி சிரத்தையோடும் பாதையை விட்டு விலகி நிற்பார்களா?

தேவனின் குதிரை ஜல் ஜல் என்று போய்க்கொண் டிருந்தது. குதிரையின் கண்கள் சிவந்துவிட்டன. வாயில் வெண்துரை தள்ளியது. கடிவாளத்தைப் பிடித்திருந்த, தேவனின் கரங்கள் பவளம் போலாகிவிட்டன.

அடுத்து கத்தப்பட்டு என்று ஒரு குக்கிராமம். அந்தச் சிற்றுாரைத் தாண்டியதும், எதிர்பாராத வகையில் தேவனின் குதிரை ஒரு படுகுழியில் விழுந்துவிட்டது: கிணறுபோல் ஆழமாகத் தோண்டி அதில் பஞ்சை நிரப்பி வைத்திருந்ததை இளங்காலை நேரத்தில் தேவன் எப்படி அறிவான்! படுகுழியில், பஞ்சுக்குள் புதையுண்ட தேவனல் எழுந்திருக்க முடியவில்லை. எவ்வளவு ஆழத்தில் கிடக் கிருேம் என்றுகூட அவளுல் கணக்கிட்டுப் பார்க்க இயல வில்லை. மூக்குத் துவாரங்களெல்லாம் பஞ்சடைத்து, மூச்சு விடமுடியாமல் தான் வளர்த்த வெள்ளைக் குதிரையோடு: அந்தக் குழிக்குள்ளேயே கண்களை மூடினன். அந்த வீர மறவன் சாகும்போது மேலே நின்று நாலைந்து பேர் சிரித்தது-கக்கை போட்டுச் சிரித்தது-வெற்றி பட்டமங்க லத்திற்கே" என்று ஜே. போட்டுச் சிரித்தது அவன் காதில் விழுந்தது. "கோழைக்கு வெற்றி! அது இந்த நூற்ருண் டோடு போகட்டும்! சதிக்குப் பெருமை! அது வைரை முத் தன் காலத்தோடு மக்கிப் போகட்டும் ! கல்யாணி பட்ட மங்கல நாட்டு உறவுக்குக் கடைசிப் பெண்! அவள் ஜாதி: ரோஜா! வயற் காட்டில்-வளர்ந்திருக்கும் மலை முகட்டில், காலை, மாலை எந்நேரமும் வாள் கோட்டை நாட்டின் கீர்த்தி: சொல்லிக் கைம் பெண்ணுகவே வாழ்ந்து சாகட்டும் அவள்: உறவு முறிந்தது!’ என்று கத்திக்கொண்டே நாட்டை. மறந்தான் வாளுக்குவேலி. - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/90&oldid=566004" இலிருந்து மீள்விக்கப்பட்டது