பக்கம்:செம்மாதுளை .pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

போது சடுகுடு ஆட்டம் பார்க்கப் போவார்கள். பின், வரு வார்கள். சாப்பிடுவார்கள்; எங்காவது ஒரு மூலையில் நாடகம் நடக்கும் சுற்று வட்டாரத்திலுள்ள ஜனங்கள் திரளாகக் கூடி நாடகத்தை ரசிப்பார்கள்:

மாதவி என்ருல் மடிமேல் வா கண்ணகி என்ருல் கடந்து செல்

-என்று கோவலன் சொல்லும் கட்டத்தில் ஜனத். திரளே தேம்பி அழும்: சுந்தரிசுட சில கட்டங்களில் மெய்மறந்து நின்றிருக்கி ருள். உண்மையில் கிராமத்து ஜனங்களுக்கு திருக்கோஷ்டியூர் கஜேந்திர மோrம்திருவிழா சிலப்பதிகாரத்து இந்திரவிழா போலவே தெரியும்;

தேவனின் குதிரை அந்த இடத்தில் போய்க்கொண் டிருந்தபோது அவனுக்கு இந்த நினைவுகளெல்லாம் வந்தனே சுந்தரியோடு உட்கார்ந்திருந்த இடம், அவளோடு அருகிலி ருந்து சாப்பிட்ட இடம், அவளுடைய இலையிலிருந்து மாம்பழக் கீற்றை அவன் திருடித் தின்ற நினைவு -எல்லாம் அவன் நெஞ்சைக் குடைந்தன. அதற்குள் குதிரை பைக் குடிப்பட்டிக்குள் போய் விட்டது. சோலைக்குள் மிதக்கும் கப்பலைப் போன்றது அந்தச் சிங்காரச் சிற்றுார்.செழிப்பான தமிழ்க் கிராமம் அது. அப்போதுதான் கருகரு வென்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. வயதுப் பெண்க ளெல்லாம் முகம் தெரியுமுன் ஏரிக்கரைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். குதிரையின் குளம்பொலி அவர்களுக்கு மிரட்சியைக் கொடுத்தது. பாதையைவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.

தமிழகத்தில், அதிகாலையில் குதிரையின் மணியோசை கேட்டால், அய்யனர் நகர் வலம் வந்து போகிருர்’ என்று தமிழ்த் தாய்மார்கள் பேசிக்கொள்வதுண்டு. தேவனின் குதிரைச் சத்தம் கேட்டதும் பைக் குடிப்பட்டிப் பாவையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/89&oldid=566003" இலிருந்து மீள்விக்கப்பட்டது