பக்கம்:செம்மாதுளை .pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

வந்தால் வாகைசூடிவேருவேன்: செத்தால் களத்தில் வந்து பார்த்துக் கொள்: என்று சொல்லிவிட்டுக் கிளம்பி ன்ை. சுந்தரியின் கண்களில் கண்ணிர் அரும்புகட்டி நின்றது: &

கீழ்வானம் சிவந்துவிட்டது. புலர்ந்து விட்டதே பொழுது எனப் புரவியைத் தட்டினன் தேவன். குதிரையின் நாலுகால் சத்தம் இரண்டு கால் சத்தமாயிற்று. மின்மினி களின் ஒளி மங்காத நேரம்: இரவா பகலா என்று சொல்ல முடியாத பொழுதாக இருந்தது அந்த் நேரம் பாதை மட் டுப்படவில்லை. எப்படியோ சரிசெய்து கொண்டு குதிரையை முன்னிலும் வேகமாகத் தட்டினன். செஞ்சிக் குதிரையோ எனத் தேவன் குதிரை கால் கிளப்பிப் பறந்தது.

திருக்கோஷ்டியூர் மேலத் தெரு அயர்ந்திருந்தது. டடக் டடக் என்ற ஓசையுடன் தேவனின் குதிரை ஊரைக் கடந்து விட்டது. இடிந்த கோயிலின் ஒரத்திவி ருந்து கழுதை கதறியது. அதைத் தாண்டியதும் ஆற்றங் கரைப் பிள்ளையார் கோயிலில் மணியொலித்தது. இதை யெல்லாம் வாளுக்குவேலி தனக்கு வெற்றி கிடைக்கப் போவதற்கான அறிகுறிகள் எனக் கருதின்ை.

அடுத்து ஆறு குறுக்கிட்டது; அதைத்தான் மணிமுத் தாறு என்பார்கள். கஜேந்திர மோட்சம்"-திருவிழா நடப்பதும் அந்த ஆற்றுக்குள்தான். சாகப் போகிற காலத்திலே இருக்கிற தம்பதிகள்கூட அந்தத் திருவிழா வன்று முதல் இரவுத் தம்பதிகளைப் போலவே இன்பமாக இருப்பார்கள். தேவன் இரண்டு முறை சுந்தரியோடு அந் தத் திருவிழாவுக்கு வந்திருக்கிருன் விடிய விடியக் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்திருக்கிருன். வெள்ளி நில வடிக்கும். பட்டு விரிப்பு விரித்து தேவனும் சுந்தரியும் கதை கதையாகப் பேசுவார்கள். தேவன் வீரக்கதை சொல்லு வான். அவள் இன்பக்கதை கூறுவாள்: சலிப்புத் தட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/88&oldid=566002" இலிருந்து மீள்விக்கப்பட்டது