பக்கம்:செம்மாதுளை .pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

நள்ளிரவு! பின நாற்றம் மூக்கைத் துளைத்தது. சிறு வயல் காட்டிலிருந்த நரிகள் அனைத்தும் பாகனேரி புகுந்து குருதி வழிப்பொட்டலில் குவிந்துகிடந்த பிணங் களைப் புரட்ட ஆரம்பித்தன அமைதியான அந்த வேளையில் நரிகள் மனித எலும்புகளைக் கடித்து ஒடித்த ஓசை குடு குடுப்பை அடிப்பதுபோலிருந்தது. அந்த நேரத்தில், வளர்ந்த ஒல்லியான உருவம் ஒன்று பட்ட மங்கலப் படையின் பாசறைக்குள் நுழைந்தது. காவலன் தடுத்தான் வடிவாம்பாளின் கணையாழியைக் காண்பித்து உள்ளே புகுந்தது அந்த உருவம். அரை நாழிகைக் கெல்லாம் அந்த உருவம் மூன்று பேர் பின் தொடர, வந்த வழியே திரும்பியது. -

சிலை மறவன்

முன்ரும் நாள் போர் முடிந்ததும் தேவன் அன் றிரவே திருக்கோஷ்டியூர் போய்விட்டான். உக்கிரமாகப் போர் செய்த அன்று இரவு போகம் செய்தால் தான் மீண்டும் புது வலிவு வரும் என்று நம்பி அதை நடைமுறைக் கொள்கையாகக் .ெ க ா ண் டு வந்த மாவீரன் அலெக்சாண்டரைப் பின்பற்றினன் வாளுக்கு வேலி: கண்டிப்பும் விதி முறைகளும் நிறைந்திட்ட தமிழர் சமுதாயத்தில் பிறந்தவனதலால், வாளுக்கு வேலி முறை கெட்ட செயலில் இறங்கப் பயந்தான். குதிரையைத் தட்டிவிட்டான் அந்த வெள்ளைக் குதிரை மாதவ மாளிகை வந்து நின்றது. அன்றிரவு அங்கு தங்கின்ை வெள்ளி முளைக்குமுன் எழுந்து போருடை பூண்டான். சுந்தரி நெற்றிக்குத் திலகமிட்டு, உடை வாளைக் கையில் கொடுத்து விடைகொடுத்து அனுப் பினுள்: : .

"எப்போது வருவீர்களத்தான்" என்று உருக்கமுடன் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/87&oldid=566001" இலிருந்து மீள்விக்கப்பட்டது