பக்கம்:செம்மாதுளை .pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

விருந்தது. வாளுக்குவேலி, பட்டமங்கலத்துக் குழந்தை களுக்குப் பூச்சாண்டி"யாகக் கற்பிக்கப்பட்டான். வைர முத்தனே பாகனேரிச் சிரு.ர்களுக்கு விரோதியாக அறிமுக மானன்.

குருதி வழிப் பொட்டல்'

படைகள் மோத நாள் குறித்தாகி விட்டது. பாகனேரி யில் களம் அமைந்தது: ஒரே பாசறையிலிருந்து வெவ் வேறு திசை நோக்கிப் பாயவேண்டிய கள்ளர்கள், எதிர் முகம் நோக்கிக் கச்சை கட்டினர்கள். அந்நியப் படையை நிர்மூலமாக்க வேண்டிய தென்திசை முன்னேடிகள் ஆர்த் தெழுந்து ஒருவரை ஒருவர் விழுங்குவது போல் களத்தில் குதித்தார்கள். பாகனேரி அழுதது! அது கேட்டுப் பட்ட மங்கலம் துக்கித்தது! கள்ளர் தேசமே கண்கலங்கி நின்றது. யார் தோற்ருலும் கள்ளர்தானே தோற்பர் என்றுகூற ஒரு புலவர்கூட அப்போது இல்லை. இனத்தார் ரத்தத்தில் இனத்தார் நீந்துவதா என்று எடுத்துரைக்க எவரும் முன் வரவில்லை. ஒரே உலைக் களத்து வாட்கள் எதிர் நின்று உராய்ந்தன. உறவினர் அங்கங்களை உறவினர் பதம் பார்த்தனர். விறகுடைத்துப் போட்டதுபோல் கள்ளர் பிணம் குவிந்தது. வெற்றி என்ற இறுதி நிலைக்கு எப்படை யும் வரவில்லை. மானுக்கும் மயிலுக்குமா சண்டை? நரிக்கும் ஓநாய்க்குமா பகை? வேங்கைக்கும் வேங்கைக்கு மல்லவா கலகம்! அங்கே வெற்றி என்பது கல்லில் நார் உரிப்பதைக் காட்டிலும் கடினமாகத் தானே இருக்கும்!

போர் தொடர்ந்து நடந்தது. இரவு நேரங்களில் கள்ளர்படை தனித்தனிப் பாசறையில் ஒய்வு பெற்றது. எப்படியும் நாளையப் போர் இறுதிப் போராக இருக்கு மென்று இருசாராரும் நம்பினர்: வைரமுத்தன் அந்த நான்காவது நாள் போரைத்தான் முழுதாக நம்பி யிருந்தான். - -

2 016 —6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/86&oldid=566000" இலிருந்து மீள்விக்கப்பட்டது