பக்கம்:செம்மாதுளை .pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பட்டமங்கலத்துப் பிள்ளையார் இரண்டு கள்ளர் நாடு களுக்குமிடையே பெரு த்த பகையை வளர்த்துவிட்டார். கொள்வினை-கொடுப்பினைகள் கூட அறுந்து போகும் அளவுக்கு விரோதம் முற்றிவிட்டது. நாட்டு அம்பலகாரர் களுக்கெல்லாம் செய்தி எட்டியது. உட்பகை பிறந்து விட்டதே, ஊர் இரணடு பட்டுவிட்டதே என வருந்தினர் கள் பிறநாட்டார்கள். வாளுக்கு வேலியோ, கருத்த ஆதப் பனே இதுபற்றித் துளியும் கவலைப்படவில்லை. அவர்களுக் கெல்லாம் சேர்த்து கல்யாணி அழுதாள் நிம்மதியிழந்த வளாய் நாட்களைக் கழித்தாள். அண்ணன் மார்பெருந்தவறு செய்துவிட்டனர் என்று எண்ணி அவள் வேண்டிக் கொள்ளாத தேவதைகள் இல்லை. நெய்விளக்கு, நேரத்திர மலர்கள் எதெதோ வாங்கி வைப்பதாகக் கேட்டுக்கொண் டாள். அத்தான் ஒரு பக்கம்; அண்ணன்மார் ஒரு பக்கம்; சத்தான வாலிபப் பருவம் கருகி உதிர்கிறதே என்ற மனக் கலக்கம் இன்னெரு பக்கம்; கணவன் கண்ணெதிரே கைம் பெண்போல் வாழ்கிருளே என்ற தண்ணிர்த் துறை அரசியல் ஒரு பக்கம்-கல்யாணி புலம்பினள்! ஏக்கம் நிறைந்து, எழில் கரைந்தது. -

o <> to -- = - - *

ஜாதிக் கட்டுப்பாடு, நாட்டுக் கூட்டம் எதுவும் வாளுக்குவேலி-வைரமுத்தன் தகராறை அடக்க முடிய வில்லை. வாழ்வா? சாவா? என்று போரிட்டு முடிவு செய்யத் தீர்மானித்தார்கள் இருசாராரும் வெள்ளைப் புருவைப் பறக்கவிட நினைத்தவர்களெல்லாம் ஒதுங்கிக் கொண்டார். கள். அதிவிரைவில் மிகப் பெரிய ரத் தக் களறி ஒன்று நடைப்பெறப் போகிறது என்று ஒவ்வொருவரும் எண்ணிக் கொண்டே நமக்கேன் இந்தப் பொல்லாப்பு" என்று விலகிக்கொண்டார்கள். விளக்கு வைக்குமுன் கதவைப் பூட்டுவதும், விடிந்து வெயில் வந்த பிறகு கதவைத் திறப் பதுமான நிலை கள்ளர் நாட்டில் கொஞ்ச காலம் அமுலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/85&oldid=565999" இலிருந்து மீள்விக்கப்பட்டது