பக்கம்:செம்மாதுளை .pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

"என்னடா கவுதார், என்ன அவசரமாக வருகிருய்?" --கேட்டான் ஆதப்பன்.

அதிகாலையிலே கோயில் பூசாரி வந்தாருங்க வந்து, பில்லாத்தா கோயிலுக்கு எதிரே ஒரு பிள்ளையாரு புதுசா இருக்குதே அது எப்படி வந்ததுன்னு கேட்டாரு. எசமா எந்திருக்கட்டும். கேட்டுச் சொல்றேன்னு சொல்லி அனுப் பிச்சிருக்கேன். அந்தப் பிள்ளையாருக்குக் கீழே பட்டமங் கலத்துப் பிள்ளையார் ருன்னு கரித்துண்டிலே எழுதியிருக்கு தாம்ல-பயமும் பச்சாதாபமும் கலந்த தொனியில் கவு தாரி சொன்னன்: -

சரி போ! அண்ணன் எழுந்திருக்கட்டும் கல்யாணி, உன்னை அலக்கழித்த பாவம், பட்டமங்கலத்தையே பிடித் துக் கொண்டது பார்த்தாயா?"

போங்க அண்ணு! எனக்கு என்னமோ பயமாகத் தானிருக்கு! பட்டமங்கலத்தாரைப் பொல்லாதவர் என் Lífrr#3; Gir!**

கல்யாணி! கீழே போ! எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்று மிரட்டி அனுப்பிவிட்டான் ஆதப்பன்: கல்யாணி மாடிப்படியில் இறங்கிக்கொண்டிருக்கும்போது, மேலே தேவனின் பேச்சுக்குரல் கேட்டது; அவள் நின்று கவனித்தாள்.

"ஆதப்பா நடந்ததைக் கல்யாணியிடம் சொல்லாதே! இளம் மனம் மேலும், புருஷன்மீது பக்திகொண்டவள்! பிள்ளையாரை நமது ஆட்கள்தான் தூக்கிவந்தார்கள் என்று தெரிந்தால் அவள் சாப்பிடக்கூட மாட்டாள்.' என்று தேவன் படுத்துக்கொண்டே சொன்னது கல்யாணி யின் காதில் விழுந்தது. அடுத்த கணம் மாடிப்படியில் "தடதட வென்று சத்தம் கேட்டது. ஆதப்பன் எழுந்தோடி வந்தான். கல்யாணி மயக்கமுற்று மாடிப்படியில் உருண்டு, சிறு சிறு காயங்களுடன் தரையில் சுருண்டு கிடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/84&oldid=565998" இலிருந்து மீள்விக்கப்பட்டது