பக்கம்:செம்மாதுளை .pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

விசாரித்தான். முத்தனைக் கண்டதும் அவர்களுக்கு ஒரு தெம்பு வந்தது. கோயிலிலே இருந்த பிள்ளையாரைக் காணுேம்! என்ருர்கள்: முத்தனுக்கு நம்பிக்கை யில்லை. நேராகக் கோயிலுக்குச் சென்று பார்வையிட்டான். பிள்ளை யார் சிலை, இருந்த இடத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட் டிருந்தது.

'மனிதனை மனிதன் சிறை வைப்பதுண்டு மகேஸ் வரனைச் சிறை வைப்பதென்ருல்'- பட்டமங்கலமே மூக்கில் விரல் வைத்தது.

இந்தச் செய்தி பாகனேரிக்கு எட்டியது. கள்ளர் நாட் டில் கோயில் விக்ரகம் காணுமற் போனதும் அதுதான் முதல்தடவையாதலால் எங்கும் பெருத்த பரபரப்பு ஏற் பட்டுவிட்டது. கல்யாணிக்குக்கூட பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. மேல்மாடத்திற்குப் போனள். தேவனும் ஆதப்பனும் அடுத்தடுத்துத் துரங்கிக் கொண்டிருந்தார் கள். வேல் கம்பு, பிச்சுவா இவை வழக்கம்போல் பக்கத் திலிருந்தன. கல்யாணி தேவனை எழுப்பினள். தேவன் எழுந்திருக்கவில்லை. பக்கத்தில் படுத்திருந்த ஆதப்பன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான். அவன் முகத்தில் களைப்புத் தட்டியிருந்தது. ஒர வாயின் வழியே வடிந்தி ருந்த வெற்றிலைக் காவி உலர்ந்து கரைபடிந்திருந்தது.

அண்ணு! ஒரு தாக்கல் தெரியுமா?"

என்ன கல்யாணி?’’

பட்டமங்கலத்திலே பிள்ளையாரைக் காளுேமாம்:

வேடிக்கையாக இருக்கிறதே! சாமியை எவளுவது தூக்கிப் போவான'

போயிட்டானே! :

அப்போது கவுதாரி வேகமாக மாடிக்கு வந்தான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/83&oldid=565997" இலிருந்து மீள்விக்கப்பட்டது