பக்கம்:செம்மாதுளை .pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

கூடும் என பட்டமங்கலத்தார் எதிர்பார்த்தார்கள். முறைப் படி திருவிழாவுக்கு முன் கூடும் நாட்டுக் கூட்டத்திற்கு ஏராளமான வழக்குகள் வந்தன. ஆனல். தேருக்குத் தீயிட்ட வழக்கு வரவில்லை; திருவிழாவுக்குக் காப்புக் கட்டு நடை பெற்றது.

நாளை விடிந்தால் திருவிழா. பட்டமங்கலத்துப் பிள்ளை யார் கோயில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்: தது. தெருவெல்லாம் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன: மூலைக்கு மூலை வாலிபர்கள் சடுகுடு" விளையாடிக்கொண்டி ருந்தார்கள். வயதுப் பெண்கள் கூட கண்ணும்பூச்சி பொத்தி விளையாடினர்கள். திருவிழாக் காலங்களில் முறைப் படி ஊதவேண்டிய கொம்பு, இளமையான இருட்டில் அன்று ஏகாந்தக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. வளைந்து ஒலித்த அந்தக் கொம்பொலி, வைகை நதியின் கருமணல் நீரோட்டத்தை நினைவுறுத்திக் கொண்டிருந்தது. பெண்கள் சூடியிருந்த பூக்கள் பட்டமங்கலத்தையே கல் யாண வீடாகக் காட்டியது.

வைரமுத்தன் திருக்கோஷ்டியூருக்குப் போகும். சாலையில் தனிமையாக உட்கார்ந்து பொன்னியை நினைத் துப் பொங்கி எழுவதும் , பின் சாந்தி பெறுவதுமாக இருந்: தான். சொக்கநாதபுரம், கருங்குளம், புதுார், கக்காட்டுர் முதலிய சிற்றுார்களிலிருந்து திருவிழாப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தவர்கள் கண்களில் படாத வகையில் மாற்றி வரண்டு போயிருந்த கண்வாயின் உள்வாயிலில் உட்கார்ந்: திருந்த வைரமுத்தனுக்கு, ஊருக்குள்ளிருந்து ஒரு பெருங் கூச்சல் வருவதுபோல் கேட்டது உற்றுக் கவனித்தான், 'விடாதே பிடி! பிடி!' என்ற சத்தம் அவனை நோக்கி வருவது போல் பட்டது. இருட்டு; ஒன்றும் புலப்படவில்லை. கண்மாய்க் கரையை விட்டு எழுந்து திருக்கோஷ்டியூர்ச் சாலைக்கு வந்தான். நாலைந்துபேர் வியர்க்க வியர்க்க ஒடி வந்து கொண்டிருந்தார்கள். முத்தன் அவர்களை நிறுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/82&oldid=565996" இலிருந்து மீள்விக்கப்பட்டது