பக்கம்:செம்மாதுளை .pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

வழியிலே ஒரு கிழவர்- அவர் பெயர் வேலுடையான். "சண்டாளர்கள் தேரில் தி வைத்து விட்டார்கள்" என்று அழுதுகொண்டே சொன்னர்.

கிளம்பி வந்த படைக்குக் கோபம் வளர்ந்தது. தேர் நிலைக்கு ஓடினர்கள். சிற்பிகளின் கைவண்ணத்தால் செதுக் கப்பட்டிருந்த சிங்காரத் தேர்-நாளைக் காலை நாலு வீதியும் சுற்றிவர இருந்த கலைச்செல்வம்...சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க மக்கள் மண்ணை வாரி அடித்தார்கள். எண்ணை பிடித்த சிற்பங்களல்லவா! எப்படி அணையும் தீ!

பட்டமங்கலத்துப் பிள்ளையார்”

தேர் இப்பற்றி எரிந்த சேதி பட்டமங்கலத்திற்கு எட்டியது. விரோதம் காரணமாக மாட்டைக் கடத்திக் கொண்டு போவதும், மாட்டுக் கொம்புகளை ஒடித்துக் கொண்டு வந்து எதிரியின் வீட்டு வாசலில் போடுவதும், விளைந்து கிடக்கும் கதிர்களை நாசம் செய்வதும் கள்ளர் சீமையில் மிகச் சாதாரணம்: ஆல்ை, விரோதம் காரண மாகத் தேருக்குத் தீ வைத்ததை கள்ளர் நாடு முதன் முதலாக அப்போதுதான் சந்தித்திருக்கிறது. முதலில் பட்டமங்கலம் திகைத்தது; தேருக்குத் தீ வைத்தது வைரமுத்தன்தான் என்பதை அறிந்தபின் மிரண்டது. வெற்றி வீரர்களான லும் குற்றக் கூண்டிலே நிற்கும்போது பலவீனமடைந்து விடுகிருர்கள். வைரமுத்தன் பாகனேரிக்கே தீ வைத்திருந் தால் கூட அவனைத் தட்டிக்கொடுத்திருப்பார்கள். ஆனால், தேவியின் தேருக்குத் தீ வைத்தான் என்றதும் அனுதாபம் காட்டவேண்டியவர்கள் கூட வைரமுத்தன்அக்ரமம் செய் தான்’ என நொந்து கொண்டார்கள்.

பட்டமங்கலம் திருவிழா நெருங்கிக்கொண்டு ೧5,55 பாகனேரிக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டத்தில் முறையிடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/81&oldid=565995" இலிருந்து மீள்விக்கப்பட்டது