பக்கம்:செம்மாதுளை .pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

-என்றுமில்லாமல் சுந்தரி அன்று அப்படி அன்பாகக் கட் டளையிட்டாள்.

தேவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை:

சுந்தரி தேவனருகில் வந்து அவன் காதில் ஏதோ சொன்னுள்,

'உனக்கு யார் சொன்னது சுந்தரி?’’

'சிலம்பி சொன்னுள். நேற்று இரவு அவள் வடிவாம் பாள் வீட்டுக்குப் போளுளாம். அங்கே வைரமுத்தரும், அவரோடு வேறுசிலரும் இருந்தார்களாம்: அவர்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்டார்களாம்!'

"அப்படியா சேதி சரி, சுந்தரி வண்டியைப் பூட்டச் சொல்! ஆயுதங்களையும் எடுத்துக் கொடு! நீ திருவிழா வுக்கு வரவேண்டாம்! அடுத்த வருஷம் பார்த்துக்கொள்ள லாம்!' என்று சொல்லிவிட்டு உடனே பாகனேரிக்குப் பயணமானன் தேவன்.

நாளே விடிந்தால் தேரோட்டம். இரவு முழுதும் தேவன் தூங்கவில்லை. பட்டமங்கலத்தார் தேரோட்டத்தன்று: கலகம் விளைவிக்கப் போவதாக சுந்தரி சொன்னது தேவன் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. கத்தி, கம்பு சகிதமாக ஆட்களைத் திரட்டி வைத்திருந்தான் தேவன்.

விடியப் போகும் நேரத்தில் ஊருக்குள்ளிருந்து தீ தீ! என்று கூக்குரல் கேட்டது. தேவன் துடித்தெழுந்தான்! 'ஆதப்பா கிளம்பு’ என்று கட்டளையிட்டான். புற்றீசல் போலப் பாகனேரிப் படை கிளம்பியது.

"எங்கே தீ யார் வீட்டில் தீ! என்று கூவிக் கொண்டே ஆயுதந் தாங்கியோர் ஊருக்குள் ஒடி. ஞர்கள், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/80&oldid=565994" இலிருந்து மீள்விக்கப்பட்டது