பக்கம்:செம்மாதுளை .pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

வேலி பதினைந்து நாட்களாகப் பாகனேரி வரவில்லை. ஆதப் பனு க்கு அண்ணன் பேரில் மட்டற்ற மரியாதை உண்டு: ஆகவே அவன் கிழமைக்கு ஒரு தடவை திருக்கோஷ்டி யூருக்கு ஆளனுப்பிப் பார்த்து வரச்சொல்லுவதுண்டு: தேவனுக்கும் தன் தம்பி மீது அசையாத நம்பிக்கை.

ஆனிமாதம் நடந்துகொண்டிருந்தது. பாகனேரிப் பில்லாத்தா கோயிலுக்குக் காப்புக் கட்டவேண்டுமே! தேவன் இல்லாமல் நடைபெற முடியாதல்லவா! சுந்தரி யிடம் சொல்லிவிட்டு பாகனேரி போய் அதற்கான காரியங் களைச் செய்துவிட்டு மறுவெள்ளிக்கிழமையே தேவன் திருக் கோஷ்டியூர் திரும்பிவிட்டான். தேவன் பக்கமிருந்தால் போதும், சுந்தரி தேவலோகத்தில் இருப்பதாகவே நினைப் பாள். அவள் உப்புக் கடல் ஒளிமுத்து அல்லவா? தேவன் துணையிருந்தால் போதுமென்று கருதினளே யன்றி, அவன் வரும் போதெல்லாம் பொன்னும் பொருளும் கொண்டு வந்து கொட்ட வேண்டுமென்று விரும்பவில்லை சுந்தரி.

பாகனேரித் தேரோட்டம் நெருங்கிக்கொண்டு வந்தது. திருவிழாவுக்கு சுந்தரியையும் அழைத்துக் கொண்டு போவ தாக இருந் தான் தேவன். கீர்த்திபெற்ற ஆசை.ராஜாவின் பிறந்த ஊருக்குப் போகப் போவதை எண்ணி அவள் இன் பத்தில் திளைத்துக் கிடந்தாள்.

தேரோட்டத்திற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தன. தேவன் பட்டமங்கலத்துப் பகையை மறந்திருந்தான்.

பூ எடுக்கத் தோட்டத்திற்குப் போன சுந்தரி பாதியி லேயே திரும்பி வந்தாள். *.

"தோட்டத்தில் பூக்கள் இல்லையா? போனதும் வந்தது. மாக இருக்கிறதே!” r

"மல்லிகைப் பாத்தியோடு திரும்பிவிட்டேன் அத் தான். நீங்கள் இப்போதே பாகனேரிக்குப் புறப்படுங்கள்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/79&oldid=565993" இலிருந்து மீள்விக்கப்பட்டது