பக்கம்:செம்மாதுளை .pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

துரத்து' என்று சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விட்டான் தேவன். அண்ணன் கட்டளை! தம்பி செய்து முடித்தான். கல்யாணியின் அன்புக்குப் பாத்திரமாக வி ள ங் கி ய பொன் னி-பட்டமங்கலத்தில் அவளுக்குப் பக்கத்துணையாக இருந்த பொன்னி -வாலை இழந்து, காதுகளே இழந்து, ரத்தம் சொட்டச் சொட்டப் பாகனேரி நோக்கி ஓடியது.

e e - - - 參 琴 - -

செத்த நாய்க்குப் பக்கத்தில் வைரமுத்தன் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரிய வில்லை. வெளியிலே வந்து பார்த்தான்; ஊரே துங்கிக் கொண்டிருந்தது.

நாட்டுக் கூட்டம் போடவேண்டும்; கள்ளர்கள் மத்தியில் வாளுக்குவேலியை கைகட்டி நிற்கச் செய்ய வேண்டுமென்பது வைரமுத்தனின் தணியாத ஆசை ஆனால், கள்ளர் நாட்டின் விதிமுறை அவனுக்குக் கொஞ்சம் தடங்கலாக இருந்தது. நாட்டுக் கூட்டமென் பது திருவிழாவுக்குக் காப்புக் கட்டுவதற்குமுன் கூடி, கடந்த கால நிகழ்ச்சிகளே ஆராயும் அதிகாரம் பெற்ற தாகும். அவ்வாறு கூடும் நாட்டுக் கூட்டத்தில் தான் எல்லா வழக்குகளும் ஆராயப்பட்டு முடிவு பெறுவதுண்டு. ஆனல்-பொன்னி தாலி கட்டி வந்த காலம்-நாட்டுக் கூட் டம் கூட்டவேண்டுமென்று வைரமுத்தன் துடித்தகாலம்பட்டமங்கலத்தில் திருவிழா முடிந்த காலம்! அடுத்த கூட் டத்திற்கு வைரமுத்தன் ஒரு வருஷ காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. பொன்னி கழுத்தில் தாலி கண்ட பிறகு பொறுப்பான முத்தன் ஒரு வருஷத்திற்கு...?

பாகனேரித் தேரோட்டம்

வைகாசித் திங்களில் திருக்கோஷ்டியூரில் நடைபெற்ற கஜேந்திர மோrம் திருவிழாவுக்குப் போன வாளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/78&oldid=565992" இலிருந்து மீள்விக்கப்பட்டது