பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

செம்மொழிப் புதையல்


தோழி :- இப்படித்தான் வேலன் கூறுவான். அறியா மாக்கள் அதனை உண்மை யென்று கருதுவர், இன்றும் அதைத் தான் நம் தாயும் கேட்கப் போகின்றாள்.

மெல்லி :- இன்றும் அதைத்தானே சொல்லப் போகின்றான்?

தோழி :-ஆமாம். ஆனால், இன்று யானும் வேலனைக் கண்டு ஒன்று கேட்கப் போகிறேன். என் கேள்வியால் வேலன் பொய்ம்மையும், நம் ஒழுக்கத்தின் மெய்ம்மையும் விளக்கமடையப் போகின்றன.

மெல்லி :-எப்படி? எனக்கு அதை விளங்கச்சொல்.

தோழி :- வேலன் இன்று நம் தாயிடம் முருகன் நம்மை அணங்கினன்; என்பானாயின், வெறி கொள்வேல'உனது இறைவன், மத மிக்க வேழத்தின் மெய்யில் ஊடுருவத் தன் அம்பைச் செலுத்தி, பின் அதன் அடிச் சுவடுபற்றி வேட்டம் செல்லுமோ? என வினவக்கருதுகின்றேன். வினவின் என்?

மெல்லி :-(முறுவலித்து) வினவின் என்னாம்? யானை வேட்டம் புரிந்து வந்த வீரன் ஒருவனை நாம் நமக்கு இறைவனாகக் கொண்டுள்ளோம் என் தெரிந்து கொள்வான்.

தோழி ஏன் சிறைப்புறத்தை நோக்குகின்றாள். அங்கே ஏன் வேலிக்கண் படர்ந்துள்ள தழைகள் அசைகின்றன. நல்லது. அங்கிருந் தொரு வல்விற் காளை என் மேற்குத் திசை நோக்கிச் செல்கின்றான். அவன் ஏதோ தனக்குள் சொல்லிக் கொள்கின்றான்; அவன் பின்சென்று கேட்போம்.

காளை:- இனி, நமக்கும் இம் மெல்லியல் நல்லாளுக்கும் உண்டாகிய ஒழுக்கம் அவள் தாய்க்கும் தமர்க்கும் புலனாகி விடும். ஆகவே, இவளை இனி இங்கே தலைக்கூடல் அரிது. ஆகவே, இனிச் சான்றோரைச் செலுத்தி வரைந்து கொள்வதே கடன்.