பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. பொருண்மொழி

- யான் சிறிது நாட்களுக்குமுன் ஒரு ஆங்கில நூலைப்

படித்து வருங்கால், இத்தலைப்பொருள்பற்றிய சொற்பொழி வொன்று அதன்கண் இருக்கக் கண்டேன். அதனையான் நுணுகிப் படித்து வருங்காலத்தில், சில நுண்பொருள்கள் அமைந் திருப்பதையுணர்ந்து அதன் உட்பொருளைத் தமிழில் எழுதின் பலர்க்கும் பயன்படுமென்றெண்ணினேனாகலின், இதுபோது எழுதுவேனாயினேன். -

பொருண்மொழி யென்பது பழமொழியைப் போல் நுண் பொருளை யகத்தே கொண்ட உயர்ந்தோர் கூறும் நன்மொழி யாகும். இது நம் தமிழ் நூல்களில் “பொருளுரை யென்றும் “பொருண்மொழிக் காஞ்சி யென்றும் வழங்கப் பெறுகின்றது. *'பொய்யில் புலவன் பொருளுரை யென்று சீத்தலைச் சாத்தனாராலும், மூதுரை பொருந்திய’ என்ற சூத்திரத்துள் ‘பொருண்மொழிக்காஞ்சி யென்று ஐயனாரிதனாராலும் கூறப்படுதல் காண்க. பொருண்மொழிக் காஞ்சியாவது, ‘எரிந்திலங்கு சடைமுடி முனிவர், புரிந்து கண்ட பொருண் மொழிந்தன்று (பு-வெ-மாலை 271) என்பர். பொருண்மொழி யென்றதொடர் பொருளை மொழிதல் எனவிரியும் வேற்றுமைத் தொகையாகும். மொழி, முதனிலைத் தொழிற்பெயர். பொருளாவது முனிவர்கள் விரும்பிக் கண்டுதெளிந்த உண்மை யென்பதாகும். ~.

இதன்கண் முனிவராவார் சடைமுடியுடையராய் உயர்ந்த வொழுக்கமும் உலகினையும் அதற்கு முழுமுதலாகிய

  • . 22-6 /. + பு.வெ. மாலை, சூ. 12.