பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
131
 


Follies committed by the sensible, extravagances uttered by the clever, crimes perpetrated by the good, that is what makes revolution.

2. மக்களின் மடமைநோக்கி மிக்க சினங்கொள்ளுதல் மடனெனப்பட்ட யாவையும் ஒருங்கே யழைத்துக் கொள்ளும் செயல்களுள் மிக்கதொன்றாம். . . .

Excessive anger against human stupidity is itself one of the most provoking of all forms of stupidity.

3. இன்பமன்று அறிஞர் வேண்டுவது; துன்பத்தினிக்கமே.

அவர் தேடிச்செல்வதும் அதனையேயாம்.

Not pleasure but freedom from pain is what the sensible man goes after.

4. தனக்கு முன்னிருந்தோன் ஒருவற்கு ஒப்பாகக் கருதில், அவனின் இரட்டித்த ஆற்றலுடையனாதல் வேண்டும்.

To equal a predecessor one must have twice his worth.

5. செய்தற் கெளியதாயினும் ஒன்றைச் செய்தலுறுபவன், அதனை அரிதென்றும், அரியதாயின் எளிதென்றும் கருதிப்புகுதல் வேண்டும். * . What is easy ought to be entered upon as though it were difficult, and what is difficult as though it were easy.

இதுகாறும் கூறியவாற்றால், பொருண்மொழியென்பது தமிழ் நூல்களில் பொருண்மொழிக்காஞ்சியென்னும் துறைப் பகுதியுள் அடங்குவதென்பதும், அது சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் பெற்று நூல்கட்கு அணியாதலேயன்றித் தொழில்முட்டறுக்கும் கருவியாமென்பதும், பொருண் மொழிகட்கு ஆங்கிலேயர்கூறும் இலக்கணம் இதுவென்பதும், ஒருவன் கற்றற்குரிய பொருள்களுள் இவற்றைக் கற்றல் அவன் வாழ்க்கைச் சாகாடுகைத்தற்கண் இன்றியமையாது வேண்டப் படுமென்பதனால், இவை மக்கள் வாழ்விற்கென வமைந்த விதிகளாம் என்பதும், அறிவாவது இஃதென்பதும், அது