பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
132
செம்மொழிப் புதையல்
 


நால்வகைப் பாகுபாடுபெறும் என்பதும், அப்பாகுபாட்டின்கண் பொருண்மொழியாலெய்தும் அறிவு மூன்றாம் பாகுபாட்டி லடங்குமென்பதும், இம்மொழிகள் மக்களின் மனப் பான்மையையுள்ளவாறு காட்டும் இயல்பின என்பதும், ஆராய்ச்சியே பொருளாகச் செல்லும் இக்காலத்தில் பொருண்மொழிகளைக் கற்று மக்களின் மனப்பண்பாராய்தலும் வேண்டுமென்பதும், மனப்பண்பு கண்டு உணர்ந்து கூறும் பொருண்மொழி யாட்சியால் ஒருவன் நன்கு மதிக்கப்பெறுவன் என்பதும், நம்நாட்டு இலக்கியங்கள் மக்களின் பொதுவாய பண்பினை யுணர்த்துகின்றனவென்பதும், இக்கால உரை நூல்களிற் சில, மக்களின் சிறப்புப் பண்பினையுணர்த்தினும் வழுமலிந்துள்ளனவென்பதும், ஏனையுரை நூல்களிற் சில பொருண்மொழிகள் இவற்றையும் உணர்த்துகின்றனவென்பதும் பிறவும் கூறப்பட்டனவாம். -

    • ...

• *:: * * * *