பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/263

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
261
 


பெண்ணொர்பால் கொண்ட தொத்தார் (, தடுளகள்) என்பதனா லும் பிறவாற்றாலும் புகழ்ந்துள்ளார்.

இனி, திருமால், பரமன் புரமெரித்த காலத்தில் அம்பாயின செய்தியை, “போகமீன்ற புண்ணிய னெய்த கணையேபோல், மாகeன்ற மாமதியன்னான் வளர்கின்றான்’ (காசு) என்றம், அவற்குக் கருடப்புள் ஊர்தியென்பதை, ‘ஆழியான் ஊர்திப்புள்’ (சாசசு) என்றும், அவன் சக்கரப்படையுடையன் என்பதனை இதனாலும் பெறவைத்தும், திருமால் கண்ணனாய்த் தோன்றிய காலத்து, பாரதப் போரில் சங்கோசை எழுப்பிய செய்தியை, ‘செங்கண்மால் தெழிக்கப்பட்ட வலம்புரித் துருவங் கொண்ட, சங்கு (அாமக) என்றும், கண்ணனைக் கோறற்குப் போந்த குவலயாபீடமென்ற யானையை அவன் அடர்த்த நிகழ்ச்சியினை, ‘மல்லல் நீர்மணி வண்ணனைப் பண்டொர்நாள், கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச், செல்வன் போன்றனன் சீவகன்’ (கூாஅசை) என்றும், திருமால் இராமனாகிய காலத்து, அவன் மராமரமேழும் எய்த வில் வன்மையை, ‘மராமர மேழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில், இராமனை வல்லன் என்பது இசையலாற் கண்டதில்லை (தசுாசகை) என உவமித்தும் மகிழ்கின்றார்.

மேலும், ஈண்டுக் கூறிய சிவபெருமானும், திருமாலும், தாம் பரவும் அருகமூர்த்தியே எனவும், அவ்விருவரையும் பரவுவோர், அருகனைப் பரவுதல் வேண்டும் என்பார்,

‘ம்லரேந்து சேவடிய மாலென்ப மாலால்

அலரேந்தி அஞ்சலி செய்தஞ்சப் படுவார் அலரேந்தி அஞ்சலி செய்தஞ்சப் படுமேல் இலரே மலரெனினும் ஏத்தாவா றென்னே ‘களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த அளிசேர் அறவாழி அண்ணல் இவனென்ப, அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல், - விளியாக் குணத்துதி நாம் வித்தாலாறென்னே’ (துசுனசி.கெ) என்று மொழிந்திருக்கின்றார்.

இனி, இவர் காட்டி மகிழ்விக்கும் தமிழ் நூற் சொல்லாட்சிகளும், தமிழர் வழக்கவொழுக்கங்களும் ஈண்டு எடுத்துக் காட்டலுறின், இஃதோர் பெரும் பரப்பினதாகும்.