பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
278
செம்மொழிப் புதையல்
 


கூறலுற்று, விண்மீன் வீழ்ச்சியும், ஞாயிற்றுத் தெறிப்பும், நிலவுலகின் தோற்றமும் பிறவும் விரியக்கூறி"இந்நிலவுலகிற்கு மக்களுயிர் வந்ததுதற்செயலாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது”.* என்று சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் உரைத்தார். தற்செயல் (Accident) விளக்கமில்லாத சொல்லாதலின், ‘வந்தவாறு: காண்டற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறதென்பது தெளிவாகும்.

பின்பு அவர், ஐன்ஸ்டன் (Einstein) ஹlசன்பர்க் (Heisenberg) @gmej (Dirac ) @av Guogi (Lematre) லூயி-தெ-புரேக்ளி (Louis-de-Broglie) முதலாயினர் கண்ட பெளதிக வுலகை விளக்கிக் கூறி, முடிவில் தத்துவ ஞானமென்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார். அதன்கண் பிரபஞ்சம் ‘கடசக்கரர் எந்திரெமனச் சுழல்வது’ எனக் காண்கின்றார். முடிவில், இது ‘படைக்கப்பட்டதே’ என்று தேறி, இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும் எனவும். இதனைப் படைத்தோன், ஒவியம் வல்லானொருவன் தான் தீட்டும் ஓவியக்கிழிக்குப் புறம்பே நின்று ஒவியத்தை எழுதுவதுபோல, காலம், இடம் முதலியன கடந்து நின்றே படைத்திருத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக் கொள்கை நம்மை நினைக்குமாறு வற்புறுத்துகிறது என்ற கருத்துப்படவும் கூறி முடிக்கின்றார்.

பிரபஞ்சவட்டமெனவும், சங்கற்பசிருட்டியெனவும் இவர் கூறுவன மேனாட்டுச் சாக்ரடீசு முதலிய தத்துவ ஞானிகட்கும் நம் நாட்டுப் பெளக்கர மெழுதிய புட்கரர் முதலிய சிவஞானிகட்கும்’ முன்னிருந்த முன்னோர்கள் கண்டனவாகும். இவை பல நூற்றாண்டுக்கு முன்பே நம் முன்னோர் கண்டு உரைத்திருப்ப வும், சுற்றிப்போயும் சுங்கச்சாவடிக்கே வந்தது போல, புதிய புதியவாக விஞ்ஞான நெறியில் நுணுகிச் சென்று நுணுக்கரிய நுண்ணுணர்வு காணும் ஐன்ஸ்டன் முதலாயினோர் இந்த முடிவையே கண்டுரைக்கின்றார்கள் என்பது சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் கூறுவதனால் விளங்குகிறதன்றோ?

  • The Mystrious Universe p. 11-22.

+ காஞ்சிபுராணம் - காப்பு. * Ibid p. 182. + பெளஷ் 1:43,