பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
47
 

.அவாக்கொண்டது. கொள்ளினும், அதன் உளத்தச் சிறிது நாழிகைக்குள் அப்பூஞை தன் வேண்டுகோட்குச் செவி சாய்க்காது, தனக்கும். தன்னுழைக் கையடையாத் தரப்பெற்ற சினைகட்கும் ஊறிழைக்கினு மிழைக்கும் என்னும் ஓர் எண்ணம் எய்த அது அம்முயற்சியைக் கைவிட்டது.

கைவிடலும், போன வெஞ்சுரம் புளியிட வந்தாங்கு, மறைந்திருந்த வருத்தம் மீட்டும் அதன் மனத்தே தோன்ற, அது சிறிதுதேறி, தன் மனக்கியைந்த அறவுரை கூறும் ஆற்றலுடையார் இனியாவருளர் என்னுமோர் ஆராய்ச்சியைப் பின்னரும் செய்தல் தொடங்கிற்று. அவ்வுழிக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தென, வானிற் பறந்துழலும் வன்சிறைப்பருந்தொன்று அதனருகே சென்றது. இதனை யப் புழுக்காண்டலும், தன் மனத்திற் பலதிறப்பட்ட எண்ணங்களைக் கொண்டது. அவற்றுள், “இப்பருந்தினும் அஃகி யகன்றவறிவுடையார் யாவருளர்? மனத்தானும் எண்ணற்கியலாத சேணிற் பறத்தலும், ஆண்டிருந்தே, மண்மீதியங்கும் திற்றிகளை (ஈண்டுத் தின்னற்குரிய சிற்றுயிர்களை யெனக் கொள்க)க் கண்டு, அவற்றின்மேற் குறிபிழையாது ஞெரேலெனப் பாய்ந்து படிந்துண்டலுமாய உயரிய செயல்களைச் செயல்வல்லார் வேறொருவருமில ரன்றே! ஆகலின், இதனிடை, யான் எனக் காவனவற்றை யுசாவி யறிகின்றேன்” என்பது மொன்றென்க.

இங்ஙனம் எண்ணி முடிவுசெய்து கொள்ளும் அப்புழு விருந்த புலத்திற் கயலிருந்த வயலொன்றில் வேறு பருந்தொன்று வாழ்ந்து வந்தது. அதற்கும் அப்புழுவிற்கும் நெருங்கிய நட்பு முண்டு. அந்நட்புரிமை யேதுவாக, புழு, அப்பருந்தினை வரவழைத்துத் தான் அச்சினைகளை வளர்க்கு மாற்றைத் தெரிந்து கோடலை நாடி நிற்ப, செல்வக்காலை நிற்பினும் அல்லற்காலை நில்லா மாட்சியமைந்த கேண்மைசால் பருந்தும் காகதாலியமாகப் புழுவைப் பார்த்துச் செல்வான் வந்தது. வரக்கண்ட புழுவும் கழிபேருவகைகொண்டு, “அன்பு கெழுமிய நண்பே வருக. இன்பங்கனியும் நின்முகங்கண்டும் யான் இன்பமின்றியிருத்தலை யறிதியோ? இங்ஙனமிருக்கு மெனக்கு ஒரு மாற்றுக்கூறல் வல்லை கொல்லோ?” என்றது.

பருந்து:-அறிவல். மற்று நின்னையுற்ற துன்பம் ஒன்றுண்டென அறிந்தனனேயன்றி அது இத்தன்மைத்து, இவ்வேது