பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 செம்மொழி - உள்ளும் புறமும்

பெருமகிழ்வூட்டுவதாயுள்ளது இச்செயற்பாடு தமிழகமெங்குமுள்ள சுழற்சங்கங்கள், காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப எவ்வகையில் இயங்கினால் சமுதாயத்திற்கு நலம்பல பயக்கும் என்பதற்கு வழிகாட்டும் ஒரு முன்மாதியான ஆக்கச் செயல் என்பதில் ஐயமில்லை அத்தகு ஆக்கமிகு செயற்பாட்டிற்கு அடித்தளம் அமைத்துத் தந்த செயல்வீரர் ரோட்டரியன்' என் கணேசன் அவர்களும் அவரோடு இணைந்து செயல்பட்ட தஞ்சாவூர் சுழற்சங்கங்கள் அனைத்தும் பாராட்டிற் குரியனவாகும்

அன்பன் மணவை முஸ்தபா