பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 செம்மொழி - உள்ளும் புறமும்

இந்திய மொழிகளில் தமிழுக்கு அடுத்த பழமையுடைய மொழியாகக் கருதப்படும் மொழி சம்ஸ்கிருதம் ஆகும் சம்ஸ்கிருத மொழி இலக்கிய வரலாற்றில் முதல் தொகுப்பு நூலாகக் கருதப்படும் 'கவிந்த்ர வரச சமுத்சயம்" எனும் தொகுப்பு நூல் வெளிவந்தது கி பி பத்தாம் நூற்றாண்டு என்று வடமொழி இலக்கிய வரலாறு குறிப்பிடுகிறது

ஆனால், அதே சமயத்தில் தமிழில் முதல் தொகுப்பு நூலாகக் கருதப்படுவது "நெடுந்தொகை" ஆகும் இஃது தொகுக்கப்பட்ட ஆண்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டு எனச் சங்க இலக்கிய வரலாறு கூறுகிறது

இவ்வாறு உலகப் பெருமொழிகளில் குறிப்பாக செம்மொழிகளில் தொகுக்கப்பட்ட முதல் தொகுப்பு நூல் கூட, தமிழிலேயே முதலில் தொகுக்கப் பட்டுள்ளது என்பது வரலாற்று அடிப்படையில் கிடைக்கும் அசைக்க முடியாத ஆதாரபூர்வ செய்தியாக அமைந்துள்ளது

2. 35&floggiorenuo (INDIVIDUALITY)

பழமையைப் போலவே மொழி, இலக்கிய, இலக்கணத் தனித்தன்மைகளும் செம்மொழிக் குரிய தனிப் பெரும் அம்சமாகக் கருதப்படுகிறது

உலக மொழிகளில் எந்தவொரு மொழியும் இயல், இசை, நாடகமென முப்பெரும் பகுப்பாகக் பகுக்கப்பட்டு, பின் அவை அனைத்தும் ஒன்றிணைக்கப் பட்டு ஒரே மொழியாக அமைந்திருப்பதாக கூற முடியவில்லை ஒரே மொழியாயமைந்து, அதுவே,