பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 29

இயலுக்கும் இசைக்கும் நாடகத்தும் பயன்படும் மொழியாக அமைந்து இருக்கலாமே தவிர, முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்து, அவை ஒன்றி, மொழி என்ற நிலையில் எந்தவொரு மொழியும் அமைந்திருக்கவில்லை என்றே கூறலாம்

அந்த வகையில் தமிழ்மொழி மட்டுமே உலகில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழாக வளர்ந்து, வளம் பெற்று வந்துள்ளது இதனைச் செந்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரப் பதிகம்,

"இயலலிசைநாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள்"

என்று கூறி உறுதிப்படுத்துகிறது

அகம் - புறம்

சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் ஒட்டு மொத்த மனித வாழ்வை, அவற்றின் அடிப்படையில் அகம் - புறம் என இரண்டாகப் பிரித்து இலக்கியம் படைத்தனர் சமுதாய வாழ்வை இரு பெரும் பிரிவாக பிரித்த தமிழ்ப் புலவர்கள், உள்ளம் சார்ந்த வாழ்வை அகவாழ்க்கை என்றும் வீரம் சார்ந்த வெளி வாழ்க்கையைப் புறவாழ்க்கை என்றும் பிரித்து இலக்கியம் படைத்து, செழுமைப்படுத்தினர் காதல் வாழ்வாகிய அகவாழ்வையும் கூட இரண்டாகப் பிரித்து களவியல் - கற்பியல் எனப் பகுத்து வாழ்ந்த தனித்தன்மையும் தமிழ்ப் புலவர்கட்குண்டு காதல் வயப்பட்ட வாழ்வுச் சூழலை களவியல்' என்றும் மனமொத்து, மணமுடித்து, இல்லறம் பேணிவாழும் நல்லற வாழ்வைக் கற்பியல் எனக் கொண்டு வாழும் தமிழரின் வாழ்வு நெறி இலக்கியத்தில் மட்டுமல்ல,