பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 39

போன்றே, இன்றைய இன்றியமையாத் தேவையான அறிவியல் சார் நூல்களாக - அறிவியல் இலக்கியப் படைப்புகளாக உருவெடுத்து நிலைபெற்று வருகிறது

பழமைக்குப் பழமை - புதுமைக்குப் புதுமை

இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட வரலாற்றையுடைய ஒரு மொழி, இன்றும் வலுவோடும் வனப்போடும் பழமைக்குப் பழமை யாய், புதுமைக்குப் புதுமையாய் விளங்குகிற தென்றால் அதில் முதல்நிலை பெறும் மொழி தமிழாக, தமிழ் இலக்கியமாகத் தான் இருக்கமுடியும் என்பது மொழியியல் வரலாற்று அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்

3. அனைவரும் ஏற்கும் பொதுமைப்பண்பு

(COMMON CHARACTER)

சங்கத் தமிழ் இலக்கியங்களின் தனித் தன்மைகளில் ஒன்று, தனி மனித வாழ்வியல் பிரச்சினைகளைக் கூட, சமுதாயக் கண்ணோட்டத்தில் அலசி ஆராய்வதாகும் இதனால், இலக்கிய நிகழ்வு களின் சாயல் தத்தமது வாழ்வில் பிரதிபலிப்பதாகக் கருதும் ஒவ்வொரு தமிழனும் அவ்விலக்கியப் படைப்புத் தன்னைச் சார்ந்ததாகவே எண்ணி மகிழ்கிறான் இதனால் ஒரு குறிப்பிட்ட சாரார் அல்லது பகுதியினர் என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போகிறது அனைத்துத் தரப்பினரும் தங்களைச் சார்ந்த இலக்கியப் படைப்பாக அமைவதன் மூலம் 'அனைவரும் ஏற்கும் பொதுமைப் பண்புடைய படைப்புகளாக உலகு முன் காட்சியளிக்கின்றன