பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 செம்மொழி உள்ளும் புறமும்

கொண்டிருந்த சங்க இலக்கியம், சமயங்களின் வருகையினால் ஏற்பட்ட வாழ்வியல் போக்குகளுக்கேற்ப இலக்கியம் மாற்ற திருத்தங்களை ஏற்று, தன்னை தக்கவாறு தகவமைத்துக் கொள்ளத் தவறவில்லை அதன் விளைவாக வைதீக சமய வருகையினால் சைவ, வைணவ இலக்கிய வடிவமெடுத்தது; வைதீக சமயத்தைத் தொடர்ந்து தமிழகம் வந்த சமண (ஜெய்னம்) சமயத் தேவையை நிறைவும் செய்யும் பொருட்டு சமணப் படைப்புகளாக தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் உருவாகி நிலை பெற்றன. அதைத் தொடர்ந்து தமிழகம் வந்த பெளத்த சமயப் படைப்புகளும் அதிக அளவில் உருவாகித் தமிழின் இலக்கிய வளத்தைப் பெருக்கத் தவற வில்லை வடநாட்டிலிருந்து மட்டுமல்ல வெளி நாடுகளிலிருந்து வந்த கிருத்துவ சமயச் சார்போடு கிருத்துவ இலக்கியங்களாகவும் இஸ்லாமியம் சார்ந்த இஸ்லாமிய இலக்கியங்களாகவும் பெருமளவில் உருவெடுக்கத் தவறவில்லை

புதுமை இலக்கிய வடிவங்கள்

அதேபோன்று, ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்கள் மூலம் இங்கே அறிமுகப்படுத்தப் பட்ட நாவல் எனும் புதினப் படைப்புகள், சிறுகதை, திறனாய்வு, ஓரங்க நாடகம் முதலான பல்வேறு புதுமை இலக்கிய வடிவங்களாகத் தமிழில் உருவாகி நிலைபெறத் தவறவில்லை

இவ்வாறு சங்ககாலச் சமுதாயத் தமிழாக இருந்த தமிழ் வைதீக சமய, சமண, பெளத்த, கிருத்துவ, இஸ்லாமிய மற்றும் நவீன இலக்கியமாக உருவெடுத்து நிலைபெற்று வளங்ககூட்டியது