பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 49

தமிழ் போன்ற ஒரு மூல மொழியிலிருந்து கிளைத்து வளர்ந்த தனி மொழியே செனகல் மொழி என்பதை நன்கு உணர்ந்திருப்பதாகவும் கூறி மகிழ்ந்தார் இதிலிருந்து தமிழ் மொழியின் தாய்மைத் தன்மையை மிக நன்றாக அறிந்து கொள்ளலாம்

செனகல் போன்ற ஆஃப்ரிக்க மொழிகளில் மட்டுமல்ல, ஜப்பானியம் போன்ற ஆசிய நாட்டு மொழிகளுக்கும் தமிழின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருவதை மொழியியல் ஆய்வாளர்கள் தக்க ஆதாரத்துடன் மெய்ப்பித்து வருகிறார்கள்

கிழக்காசிய நாடுகளில் தமிழ்த்தாக்கம்

மொழியியலில் மட்டுமல்லாது கலை, பண் பாட்டுப் போக்குகளிலும் பழக்க வழக்கங்களிலும் நடையுடை பாவனைகளிலும் கூட தமிழோடும் தமிழ் இனத்தோடும் ஜப்பானியருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது பன்னாட்டு மாநாடுகளில் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு வருவதைப் பரவலாகக் காண முடிகிறது

இதன் விளைவாகவே சென்னையில் ஆசிய வியல் அமைப்பு பெருஞ்செலவில் அரசு உதவியோடு ஜப்பானியரால் உருவாக்கப்பட்டு திறம்பட இயங்கி வருகிறது. இதற்குப் பெருமளவில் நிதியுதவியும் பிற உதவிகளும் வழங்கி வருபவர்கள் ஜப்பானியர் களாவர் தங்கள் இனமும் மொழியும் தமிழகத்தோடு எல்லா வகையிலும் தொடக்க முதலே இணைப்பும் பிணைப்பும் கொண்டிருப்பதாக அவர்கள் நம்புவதே இதற்கு அடிப்படைக் காரணமாகும் ஜப்பானிய