பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 71.

மொழி ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன திராவிட ஒப்பிலக்கண ஆய்வுநூல் எழுதிய கால்டுவெல் போன்றவர்கள் இந்த அடிப்படையில் மொழியாய்வு செய்தவர்களே யாவர்.

ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் வீச்சுக்கேற்ப அதன் அடிப்படையில் மொழியியல் கொள்கை கோட்பாடுகளை வகுக்கும் மனப்போக்கு மொழி ஆய்வாளர்களிடையே ஏற்பட்டது அதற் கிணங்க மொழி நூலில் வேண்டிய மாற்ற திருத்தங் களை ஏற்படுத்தி, நீக்குவன நீக்கி, ஏற்பன ஏற்று புதிய மொழியியல் கோட்பாடுகள் இன்று உருவாக்கப் பட்டுள்ளன. இதை இன்றைக்கு மொழியியல்' (Linguistics) என அழைக்கின்றனர். இதன் அடிப் படையிலேயே மொழியியல் வல்லுநராகவும் 'மொழியியல் தந்தை' எனப் போற்றப்படும் டாக்டர் எமினோ அவர்கள் தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து வியந்துபோனார் காரணம், இன்று மொழியியல் கோட்பாடுகளாக வகுக்கப்பட்டுள்ள பல கோட்பாட்டுக் கொள்கைகளுக்கு விளக்கமாக தொல்காப்பியம் அமைந்திருப்பதுதான்

அதிலும் குறிப்பாக, தொல்காப்பிய எழுத்ததி காரத்தில் சொல் பிறப்பியலில் எழுத்துக்கள் எப்படி பிறக்கின்றன எழுத்துக்களின் உச்சரிப்பு ஒலிகள் துல்லியமாகவும் பொருளுள்ளதாகவும் அமைய அவ்வெழுத்தை எவ்வகையில் உச்சரிக்க வேண்டுமெனத் தொல்காப்பியர் வகுத்துக் கூறியுள்ள வழிமுறைகள் முழுக்கமுழுக்க அறிவியல்பூர்வமாக அமைந்துள்ளது என போற்றிப் பாராட்டி மகிழ்கிறார் டாக்டர் எமினோ அவர்கள் இந்த வகையிலும் சிறந்த மொழிக் கோட்பாடுகளை வகுத்து மொழித்திறம் பேணிவரும் மொழி தமிழ் என்பது நிலை பெறுகிறது