பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 77

திரை விலகியது - உண்மை வெளிச்சத்துக்கு வந்தது

1975ஆம் ஆண்டு யுனெஸ்கோ கூரியர் ஆசிரியர்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்த நான், ஒரு நாள் நண்பர் காரை அலி அவர்களின் உதவியோடு மிகச் சிறந்த ஃபிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞரான ஜீன் ஃபிலியோஸா அவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன் அதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகளில் முக்கியப்பங்கு வகித்தவர் சில காலம் பாண்டிச்சேரியில் தங்கி தமிழாய்வு செய்தவர் அவரது தமிழறிவையும் தமிழ்ப் பணிகளையும் ஒரளவு நன்கு அறிவேன் அவரை நேரில் கண்டு தமிழ் வளர்ச்சி குறித்து உரையாட வேண்டும் என்பது என் நெடு நாளைய ஆவல்

அன்றுவரை நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடுகளில் பெருமளவில் வெளிநாட்டுப் பிரதி நிதிகள், குறிப்பாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலந்துகொள்வதைக் கண்டு, வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களின் தமிழ்த் துறைகள் தமிழாராய்ச்சியை முறையாகவும் சிறப்பாகவும் செய்து வருவதாகக் கருதிக் கொண்டிருந்த எண்ணத்தோடு, அவரை நோக்கி பாரிஸ் சபோன் பல்கலைக் கழகத்திலுள்ள தமிழ்த்துறையின் தமிழாராய்ச்சிகளைப் பற்றி வினாத தொடுக்கலானேன்

"இங்கு தமிழுக்கென்று தனித்துறைகள் ஏதுமில்லை இப்பல்கலைக்கழகத்தில் &pg;&amé, Quongo.gif (Oriental Languages) துறையொன்று சம்ஸ்கிருதத் துறையின் கீழ் இயங்கி வருகிறது நான் சம்ஸ்கிருதப்