பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

செயலும் செயல் திறனும்இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)

8. இனி ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் இடத்தேர்வும் காலத்தேர்வும் மிக இன்றியமையாதன. எந்தச் செயலையும் எந்தவிடத்திலும் எந்தக் காலத்திலும் செய்துவிடமுடியாது. சில செயல்களைச் சில இடத்திலேயே செய்ய முடியும்; அது போல் சில செயல்களைச் சில காலத்திலேயே செய்யமுடியும்.

குளம்பி (காப்பி)ச் செடியை வயலிலோ, கரும்பை மலைப் பகுதியிலோ விளைவிக்க முடியாது.

நெல்லைக் கோடையிலோ, பலாவைப் பணிகாலத்திலோ விளைவிக்க இயலாது. எனவே,

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது. (491)

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (483)

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின். (484)

9. அடுத்து, எந்த ஒரு செயலும் எண்ணம், கற்பனை, தேர்வு, கருவி, தொடக்கம், இயைபு, முடிவு பயன் என்னும் எட்டுக் கூறுகளில் அடங்கும். அவற்றுள்,

எண்ணம் என்பது, ஒரு செயலைப் பற்றி எண்ணுவது, என்ன செய்வது, எதற்குச் செய்வது, ஏன் அதையே செய்வது, எப்படிச் செய்வது, எப்பொழுது செய்வது, எவ்விடத்தில் செய்வது, எவரைக் கொண்டு செய்வது என்பனபோல் எண்ணிப் பார்ப்பது எண்ணம்.

கற்பனை என்பது, கற்பித்துக் கொள்வது. அச்செயல் இப்படியிப்படி அமைத்ல் வேண்டும். இன்னின்ன கூறுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதனுடைய அமைப்பு இப்படி, செயற்பாடு இப்படி என்பனபோல் கற்பித்துப் பார்ப்பது கற்பனை.

தேர்வு என்பது, முடிவாக இத்ைத்தான் செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது. இதைத்தான் இப்படித் தான், இன்னவகையாகத்தான், இந்த இடத்தில்தான், இந்தக் காலத்தில்தான், இவரைக் கொண்டுதான்