பக்கம்:செவ்வானம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羲& செவ்வானம் தேய்ந்து என்ன புதுமை பூத்துவிடப் போகிறது நம்மவாழ்விலே! என்ற அலட்சியத்துக்கு வித்திட்டது. திடீரென்று எதிர்ப்பட்ட அதிசயம் தான் தாமோதரனை அவள் முதன் முதலாகக் கிணற்றருகே சந்தித்தது. இரண்டாவது சந்திப்பு மனோகரமானதாக இல்லை. விரக்தியை வளர்த்தது. எனினும் அவனைப்பற்றி எண்ணாமலிருக்க முடியவில்லை. தாமோதரன் அதிசயமானவன் தான். அவன் ஒரு லூஸ் போலிருக்கு என்று நினைத்தாள்குமுதம், அவனை மறுபடிசந்திக்கக் கூடாது என நினைத்தவள் என்றைக்காவது ஒரு நாள் அவனைப் பார்த்து என்ன, உங்கள் ஆலோசனையின் முடிவு என்ன? ஏதாவது ஞானோதயம் ஏற்பட்டதா? என்று கேட்டுவிட வேணும் என விரும்பினாள். நாளைப்போகலாம். நாளைப்போகலாம் என்று ஒவ்வொரு நாளையும் தள்ளிவந்தாள் அவள். - 20 தகதகக்கும் நெருப்பை வர்ணமாக்கித் தனி ரக ஓவியம் தீட்டியது போல் செக்கச் சிவந்திருந்தது மேல்வானம் அற்புத சக்தி எதுவோ ஆகாயத்திலே அழித்து விந்தைக் காவியம் வரைந்து கொண்டிருந்தது. தினம் புதுவனப்பு பூக்கும் ஒளிச்சோலை அந்திவானம், பொன்மயமாய், விதவித வண்ணக் கலவைகளின் விளக்க இயலாச் சித்திரமாய் திகழும் மாலைச் செவ்வானத்தைக் கண்டு தன்னை மறந்தநிலையிலே அமர்ந்து விடுவது தாமோதரனின் பண்புகளில் ஒன்று. அன்று தனியிடத்தில் மேல்வானத்தின் ஒளிக் கவிதையை ரசித்தபடி அமர்ந்திருந்ததாமோதரனின் உள்ளத்தில் அமைதியில்லை. அவனது உள்ளப்பரப்பு கூட நெருப்பு நினைவுகள் நீள்நாக்கு எழுப்பிக் கொதிப்புறுத்தும் செவ்வானமாகவே மாறியிருந்தது. அளவிட முடியாத உள்ள வானிலே இனிய நினைவுகள் குளுமை நிலவு போல் படர்வதும் உண்டு. எண்ண மணிகள் தாரகைகள் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/104&oldid=841304" இலிருந்து மீள்விக்கப்பட்டது