பக்கம்:செவ்வானம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 131 எப்படிப் பேசுவார்களோ என்று. அவன் என்ன நினைப்பானோ என்ற தயக்கமும் உடனெழும். அவனுக்கு உதவி செய்யப் போனது தாராளமாகப் பேசிச் சிரிப்பது, அங்கேயே பொழுது போக்கியது தவறு என்று நினைப்பாள் ஒரு கணம். அதில் என்ன தவறு? ஆண் பெண் இருவரிடையே கெளரமான நட்பு வளரக்கூடாதா? அப்படி நட்பு நீடிப்பது தவறா?' என்று கேட்டது அவள் சிந்தனை, அவள் வாழ்க்கை எப்படிக் கழியும் இதே ரீதியில் எவ்வளவு காலத்தைக் கழித்துவிட முடியும்?' என்ற எண்ணம் அடிக்கடி எழும் அவள் உள்ளத்திலே. எதிர்பாராத புதுமையா பூத்து விடப்போகிறது எனது வாழ்விலே! என்று குமைவாள் சிலவேளை. அவள் திகைக்கும்படி ஒரு சம்பவம் நடந்தது. அவள் எதிர்பாராத வேளையில் அவளைத் தேடி வந்தார் சிவசைலம் 26 சிவசைலம் யார் என்பது குமுதத்திற்குத் தெரியும். ஆனால் அவரை நேரில் சந்தித்துப் பேசியதில்லை. சந்திக்கவேண்டிய அவசியம் ஏற்படவுமில்லை. சிலரை முதல் முறையாகப் பார்க்கும்பொழுதே அவர்கள்மீது காரணமில்லாமல் வெறுப்பு ஏற்பட்டுவிடுகிறது. பிறகு அது வளர்ந்து கொண்டேபோகிறது. அதே போல் சிலரிடம் அன்பும் அனுதாபமும் பிறக்கின்றன. சிவசைலத்தின் பெயரை, அவரைப் பற்றிய செய்திகளை, கேட்டுக்கேட்டுப் பலருக்கு அவர்மீது கசப்புதான் ஏற்பட்டிருந்தது. குமுதத்திற்கும் அப்படித்தான் அவர் திருவுளமிசைந்து திடீரென்று விஜயம் செய்வார் என அவள் எண்ணவேயில்லை. அவ்விதம் கனவுகூடக் கண்டிருக்க முடியாது. காரணம். சிவசைலம் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தது வேறு உலகம் அவருக்கு வாழ்வின் கசப்பான உண்மைகளை அறிய வேண்டிய அவசியம் கிடையாது. அன்றாட வாழ்வில் அவதியுறு கிறவர்களைப் பற்றிய சிந்தனை கூட இருக்கமுடியாது அவரைப் போன்றவர்களுக்கு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/133&oldid=841343" இலிருந்து மீள்விக்கப்பட்டது